×

இன்னும் இந்த உலகம் என்னவெல்லாம் பார்க்கணுமோ! - பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த நடிகை....

 
premji

கடந்த மாதம் 30ம் தேதி அதாவது நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. எனவே, பலரும் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போலவும், ராதை போலவும் வேடமிட்டு மகிந்தனர். இது தொடர்பான பல புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது.

premji

இந்நிலையில், ஒரு பெண் ஒரு திரைப்படத்தின் பாடல் காட்சியில் பிரேம்ஜி அமரன் கிருஷ்ணர் வேடத்தில் நடித்த புகைப்படத்தை பகிர்ந்து  ‘ஹேப்பி கிருஷ்ண ஜெயந்தி. எங்க வீட்டு கிருஷ்ணன் பிரேம்ஜி அமரன். இப்ப ‘கசட தபற’ திரைப்படத்தில் சார் வேற லெவல்’ என பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நடிகை பிரியா பவானி சங்கர் ‘இன்னும் இந்த உலகம் என்னலாம் பாக்கணுமோ’ என சிரித்தபடி பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலாக வின்னர் படத்தில் மலை உச்சியில் வடிவேலு ஓடி கீழே குதிக்க முயற்சி செய்யும் வீடியோவை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News