அழகு பொண்ணுக்கு கிளாமர் அவசியமே இல்ல - நீட்டான உடையில் பிரபல நடிகை!
பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் இதோ
Thu, 24 Dec 2020

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.
படங்களில் மட்டுமல்லாது நிஜத்திலும் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் பிரியா பவானி சங்கர் துளி கவர்ச்சி காட்டாத குடும்ப நடிகை என தமிழ் சினிமா ரசிகர்களால் அக்மார்க் முத்திரை குத்தப்பட்டவர். நிஜத்திலும் அப்படியே தான் இருப்பார் அவருக்கென இருக்கும் கோட்டை தாண்டாமல் எப்போதும் ஒரே சீராக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வொயிட் ஷர்ட் அணிந்துக்கொண்டு செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து ரசனைக்கு ஆளாகியுள்ளார்.