×

வெங்கடேஷிற்காக மட்டும் தான் அட்ஜஸ்ட் செய்தேன்... ப்ரியா மணி

சூப்பர் ஹிட்டான அசுரன் படத்தை வெங்கடேஷை வைத்து தெலுங்கில் நாரப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.
 
priyamani

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அசுரன் படத்தை வெங்கடேஷை வைத்து தெலுங்கில் நாரப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அந்த படத்தில் வெங்கடேஷின் மனைவி சுந்தரம்மாவாக நடித்திருக்கிறார் நடிப்பு ராட்சசி ப்ரியாமணி.

நாரப்பா படத்தை ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கியிருக்கிறார். படத்தை மே மாதம் 11ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிட்டதால் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளனர்.

நாரப்பா படத்தில் நடித்தது குறித்து ப்ரியாமணி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

வெயிட்டான கதாபாத்திரமாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறேன். வெங்கடேஷின் நாரப்பா படத்தில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. வெங்கடேஷுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அவருடன் சேர்ந்து நடிக்க மூன்று முறை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது டேட்ஸ் இல்லாததால் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் தான் நாரப்பா படத்தில் வெங்கடேஷின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கைவசம் டேட்ஸ் இல்லை. இருந்தாலும் இம்முறை வெங்கடேஷ் படத்தை விட மனம் இல்லை. அதனால் பிற படங்களுக்கு கொடுத்த டேட்ஸை வாங்கி நாரப்பாவுக்கு கொடுத்தேன்.

வெங்கடேஷின் படம் என்பதால் மட்டும் தான் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடித்தேன் என்றார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறார் ப்ரியா மணி. ராஜ் மற்றும் டிகே இயக்கியிருக்கும் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ப்ரயாமணி.

தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாகக் கூறி தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடிதம் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News