×

பிரியா பவானி சங்கருக்கு இவ்ளோ பெரிய மனசா?... இந்த பாராட்டை யோகிபாபு தாங்குவாரா?....

 
பிரியா பவானி சங்கருக்கு இவ்ளோ பெரிய மனசா?... இந்த பாராட்டை யோகிபாபு தாங்குவாரா?....

விஜய் தொலைக்காட்சியில் வெளியான லொள்ளு சபா காமெடி நிகழ்சியில் மூலையில் கும்பலோடு கும்பலாக நின்றிருந்த நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. கடந்த 15 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக போராடி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார்.

வடிவேல் ஃபீல்டிலேயே இல்லை. சந்தானம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். விவேக்கும் மறைந்துவிட்ட நிலையில் தமிழ் சினிமா திரையுலகம் காமெடிக்கு யோகிபாபுவை மட்டுமே நம்பியிருக்கிறது.

எனவே, விஜய், அஜித், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் 2ம் கட்ட நடிகர்கள் திரைப்படத்திலும் யோகிபாபுதான் நடித்து வருகிறார். ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் அவரின் சம்பளம் உயர்ந்துள்ளது.  காமெடியானாக நடித்தாலும், தர்மபிரபு, கூர்கா போன்ற காமெடி கதைகளிலும்,  அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அப்படி வெளியான திரைப்படம்தான் ‘மண்டேலா’. ஒரு முடிவெட்டும் தொழிலாளியை அசிங்கமாக நடத்தும் கிராமம். ஆனால், அவனுக்கு ஓட்டு இருக்கிறது என தெரிந்தவுடன், அந்த ஒரு ஓட்டுக்காக அவனை என்னவெல்லாம் செய்கிறார்கள் என இந்திய அரசியலையே ஒரு திரைப்படத்தில் காட்டியிருந்தனர். 

mandela

இப்படத்தை மடோனா அஸ்வின் எனும் இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படம் திரை விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யோகிபாபுவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். 

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம்  ‘மண்டேலா’.  மடோனா அஸ்வின், யோகிபாபு அண்ணா.. என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News