×

ப்ரியா மணியின் திருமணம் செல்லாது... நீதிமன்றத்தை நாடிய முதல் மனைவி

ப்ரியாமணியை திருமணம் செய்து கொண்டபோது தான் ஒரு பேச்சுலர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் முஸ்தபா என்றார்.

 
4b0260dc-3675-4b43-b67e-f5ef8b615af2

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வரும் ப்ரியாமணி  முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் முஸ்தபா ராஜின் முதல் மனைவி நான் தான் என்று கூறி ஆயிஷா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ப்ரியாமணி மற்றும் முஸ்தபா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் குறித்து ஆயிஷா கூறியதாவது, முஸ்தபா இன்னும் என் கணவர் தான். அவருக்கும், ப்ரியாமணிக்கும் நடந்த திருமணம் செல்லாது. எனக்கும், கணவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை. சொல்லப் போனால் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு கூட செல்லவில்லை.

அப்படி இருக்கும்போது ப்ரியாமணியை திருமணம் செய்து கொண்டபோது தான் ஒரு பேச்சுலர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் முஸ்தபா என்றார்.

இது பற்றி முஸ்தபா கூறியதாவது, என்னை பற்றி தெரிவிக்கப்படும் புகாரில் உண்மை இல்லை. குழந்தைகளை கவனிக்க நான் ஆயிஷாவுக்கு தவறாமல் பணம் கொடுத்து வருகிறேன். மேலும் பணம் பறிக்க தான் அவர் முயற்சி செய்கிறார்.

நானும், ஆயிஷாவும் 2010ம் ஆண்டு பிரிந்தோம். அதன் பிறகு 2013ம் ஆண்டில் விவாகரத்து பெற்றோம். விவாகரத்து பெற்ற பிறகே ப்ரியாமணியை திருமணம் செய்தேன். எனக்கும், ப்ரியாமணிக்கும் 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தனை ஆண்டுகளாக ஆயிஷா ஏன் அமைதியாக இருந்தார் என்கிறார்.

முஸ்தபாவின் கேள்வி குறித்து ஆயிஷா கூறியதாவது, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருந்து கொண்டு என்ன செய்ய முடியும்?. சுமூகமாக தீர்க்க முயன்றோம். அது நடக்காதபோது சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்றார்.

priyamani
 

From around the web

Trending Videos

Tamilnadu News