Categories: Cinema News latest news

நயன்தாராவுக்கே டஃப் கொடுக்க வரும் தேசிய விருது நடிகை…நானும் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு ரவுண்டு வரப்போறேன்

தனது அபாரமான நடிப்பு திறமையால் பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டி சென்றவர் தான் நடிகை பிரியாமணி. இப்படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்திருந்த பிரியாமணி அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் என்று தான் கூற வேண்டும். இதற்கு முன்பாக பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் தான் அவருக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை என்பதால் தானோ என்னவோ தனது அபாரமான நடிப்பால் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து காட்டியிருப்பார். இவர் இறுதியாக 2012 ஆம் ஆண்டு வெளியான சாருலதா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தலைகாட்டாத பிரியாமணி தற்போது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல அறம் படத்தில் நயன்தாரா நடித்த கேரக்டர் போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது இதற்காக கதைகளை தொடர்ந்து கேட்டு வருகிறாராம். நல்ல வாய்ப்பு வந்ததும் தமிழில் நிச்சயம் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் ஒரு ரவுண்டு வலம் வருவேன் என பிரியாமணி கூறியுள்ளார். அது சரி நயன்தாராவும் இப்படி ரீ என்ட்ரி கொடுத்து தான் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிருக்காங்க. ஸோ நீங்களும் டிரை பண்ணுங்க மேடம்…

ராம் சுதன்
Published by
ராம் சுதன்