×

அறந்தாங்கி நிஷாவின் நிறத்தை கும்பலாக சேர்ந்து கலாய்த்த பிரியங்கா - திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன்பின் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இடையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராகவும் ரக்சனுடன் சேர்ந்து கலக்கினார்.

 

இந்நிலையில் பிரியங்கா மற்றும் தீனா இருவரும் சேர்ந்துகொண்டு நிஷாவின் நிறத்தை வைத்து கேலி செய்து வேடிக்கையான வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா, அதில் பிரியங்கா, தீனாவிடம் ‘காதலுக்கு ஏன் கண்ணில்லை என்று சொல்லுகிறார்கள்’ என்று கேட்டதும் அதற்கு தீனா நிஷா பக்கத்தில் கேமராவை திருப்பி ‘இதுக்கெல்லாம் காதல் நடந்தா காதலுக்கு கண் இல்லை என்று தானே அர்த்தம்’ என கூறி கிண்டலடிக்கிறார்.  அதற்கு பிரியங்கா தீனாவுக்கு கைகொடுத்து நீ சொல்வது கண்டிப்பாக சரி என கூறி நக்கலாக சிரிக்கிறார்.

இதனை கண்ட இணையவாசிகர் " இங்க இவர்களே இப்படி இருக்காங்க.. இந்த லட்சணத்துல நாம அமெரிக்க காரனுக்கு நிறவெறி பற்றி பாடம் எடுத்துட்டு இருக்கோம்.. மற்றொரு ரசிகர் ஒருவர், 50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்படி  லவ் செட்டாச்சினு திரும்ப கேட்டுற போறாங்க அக்கா. இதையெல்லாம் இனி காமெடினு பேசிட்டு திரியாதீங்க. டேய் தீனா என்று பதிவிட்டுள்ளார்.

அப்ப கருப்பா இருக்க பொண்ணுங்க காதலிக்கவே கூடாதா சில்லறைகளா...? என்றெல்லாம் அவர்கள் இருவரையும் கழுவி ஊற்றி வருகிறார்கள். விஷயம் சீரியஸ் ஆனதால் பிரியங்கா அந்த வீடியோவை ட்விட்டரில் இருந்தே நீக்கிவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News