×

என்ன வேணா செய்...ப்ரியங்கா உள்ளாடைகளோடு நிற்கணும்... இயக்குனரின் பேச்சால் அதிர்ச்சி...

நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சி விவகாரத்தை வெளியிட்டு இருப்பது சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
 
என்ன வேணா செய்...ப்ரியங்கா உள்ளாடைகளோடு நிற்கணும்... இயக்குனரின் பேச்சால் அதிர்ச்சி...

தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்கள் செய்து ஹிட் நாயகியாக வலம் வந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். தன்னை விட சிறியவரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்க மருமகளாக இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் புதிய தொடர் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. ஓப்ரா வின்ஃப்ரே தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் தனது திரை வாழ்வின் பல பக்கங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், அவரின் திரை வாழ்வின் துவக்கத்தில் ஒரு பாலிவுட் இயக்குனரின் மோசமான நடவடிக்கை அவரை எவ்வாறு பாதித்ததாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் கூறும்போது, பாலிவுட்டில் கவர்ச்சி நடனங்கள் சாதாரணமானவை தான். நான் அதற்கு கூட கவலை கொள்ளவில்லை. அப்பாடல் கடைசியில் என் ஒவ்வொரு ஆடைகளையும் கழற்றும்படி காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. நான் எனது இயக்குனரிடம் நான் அதிக லேயரில் ஆடை போட்டுக்கொள்ள கேட்டேன். அவர் என்னவேணாலும் செய்யுங்கள். ஆனால், கடைசியில் பிரியங்கா உள்ளாடைகளோடு நிற்க வேண்டும் எனக் கூறினார். அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை என்னால் எதிர்த்து பேச முடியவில்லை. 

அடுத்த நாளே படத்தில் இருந்து விலகினேன். என் சம்பளத்தையும், என்னை வைத்து செய்த ஷூட்டிங்கான தொகையையும் கொடுத்து விட்டேன். இந்த சம்பவத்தில் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்பதே என் வருத்தம் எனக் கூறி இருக்கிறார். அவரின் சுயசரிதையிலும் இடம் பெற்றும் இருக்கும் இந்த சம்பவம் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News