Categories: latest news television

பிரியங்கா பத்தி அவ முன்னாள் புருஷன் கிழிப்பான்… தெறிக்க விட்ட சுசித்ரா!…

Priyanka: பிரபல தொகுப்பாளர் விஜே பிரியங்காவை தான் நேற்றில் இருந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் தற்போது சர்ச்சை பிரபலமும் இணைய பிரச்னை சூடு பிடித்து இருக்கிறது.

மனசுல கவலை இருந்தா குக் வித் கோமாளி பக்கம் போகலாம் என்ற நிலையில் இருந்தது இந்த ஷோ. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சியை பார்த்தாலே பைத்தியம் ஆகிவிடுவோம் என்ற ரீதியில் நெகட்டிவிட்டி அப்பி கிடக்கிறது. தேவையே இல்லாமல் கண்டெண்ட் கொடுக்கிறோம் என இழுப்பதாகவே ரசிகர்கள் நினைக்கின்றனர்.

இதையும் படிங்க: எக்ஸில் மணிமேகலைக்கு குவியும் சப்போர்ட்… அசிங்கப்படும் விஜே பிரியங்கா…

இந்த நேரத்தில் தான் மணிமேகலை நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன். குக்காக வந்த ஆங்கர் என் வேலையை செய்ய விடாமல் நிறைய இடையூறுகள் செய்கிறார். நிறைய முறை சொல்லி பார்த்தாச்சு. அடக்குமுறையான அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பணம், புகழை விட சுயமரியாதை எனக்கு முக்கியம் என பிரியங்கா பெயரை சொல்லாமலே விஷயத்தை உடைத்தார்.

விஷயம் பற்றிக்கொண்டது. ரசிகர்களும் மணிமேகலைக்கு சப்போர்ட் கொடுத்து பிரியங்காவை பிரிச்சு மேய்ந்து வருகின்றனர். இதில் பிரபலங்களான அனிதா சம்பத், சைஜி என பலரும் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியின் பிரபல முன்னாள் ஆங்கரான பாவனா கூட தன்னுடைய பழைய பேட்டியில் விஜய் டிவியில் வெளியேறியதற்கு பிரியங்கா தான் காரணமும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…

இந்நிலையில் சர்ச்சை பிரபலமாக சுசித்ரா, மணிமேகலைக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அதில் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து வெளிவந்து மணிமேகலை பேசியதே பெரிய விஷயம். அவருக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். இந்த விஷயத்தில் கண்டிப்பாக பிரியங்கா மீதுதான் தப்பு இருக்கும்.

பிரியங்கா எப்படிப்பட்ட பொம்பளனு அவ முன்னாள் புருஷனிடம் கேளுங்க. அந்த நல்ல பையன் வாழ்க்கையை இந்த பொண்ணுதான் கெடுத்துட்டா. அவன் தனக்கான துணையை தேர்ந்தெடுத்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். இவருக்கு மதர் குயின் நார்சாஷ்டிக் பிரச்னை உண்டு. ஓவராக அன்பாக பழகி அவரை தனக்கு அடிமையாக்க நினைக்கும் வகைதான் என பிரியங்காவை வறுத்தெடுத்து இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily