சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களில் கவின் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் வெற்றிப்படமாக மாறிய நிலையில், அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ஒரு படம், இளம் இயக்கத்தில் ஸ்டார் என நடித்து வரும் கவின் அடுத்ததாக இயக்குனர் நெல்சனின் உதவி இயக்குனரான சிவபாலன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருவது தான் ஹைலைட்.
இதையும் படிங்க: சம்பளமே வாங்காம ரஜினி நடிச்ச படம்!.. இனிமே அப்படி ஒரு பாட்டு அமையவே அமையாது!..
இயக்குனர் நெல்சன் உடன் துபாய் டூர் சென்ற போது கவின் மற்றும் பிரியங்கா மோகன் சென்றிருந்தனர். இந்நிலையில், கவினின் அடுத்த படத்தில் அவரே ஜோடியாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
டாக்டர் மற்றும் டான் படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்து கவின் ஜோடியாக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷை போல அஜித்தை மாற்றுவாரா வெற்றிமாறன்?!.. இனிமே வேற ரூட்டில் பயணிப்பாரா ஏகே?…
டான் படத்தில் இருந்து ஹீரோயினை மட்டும் கவின் கொத்திக் கொள்ளாமல் அந்த படத்தின் முக்கிய தூணான எஸ்.ஜே. சூர்யாவையும் தனது அடுத்த படத்தில் இணைத்துக் கொண்டுள்ளாராம்.
கவின், எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் என காம்பினேஷனே கலர்ஃபுல்லாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனை தொடர்ந்து கோலிவுட்டின் இளம் ஹீரோவாக கவின் வளர்ந்து வருவது தெளிவாக தெரிகிறது. பார்க்கிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…