தென் கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவ தூதரானார் பிரியங்கா மோகன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியங்கா மோகன், தென் கொரிய சுற்றுலாத் துறையின் கௌரவ தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா மோகன். தொடர்ந்து டான், பிரதர், கேப்டம் மில்லர் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனல் டான் படத்திற்கு பிறகு அவரது படங்கள் பெரிதாக ஓடவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், தென் கொரியாவில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளம் பெண்ணாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய ஜனாதிபதி மாளிகையில் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் சிறப்பு விருந்தினராக பிரியங்கா மோகன் பங்கேற்றார். அப்போது அதிபரே பிரியங்காவின் மேட் இன் கொரியா படத்தைப் பார்த்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியர்களிடையே கொரிய கலாச்சாரத்தைப் பரப்பவும், சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கவும் பிரியங்கா மோகனை கௌரவ தூதராக தென் கொரிய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்வில் KTO தலைவர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அவருக்குச் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த கௌரவம் குறித்து பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில்:
இந்த அங்கீகாரத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தென் கொரியாவின் கலாச்சாரம், உணவு மற்றும் மக்களின் அன்பு எப்போதும் என்னை வியக்க வைத்தவை. இப்போது அந்த நாட்டின் சுற்றுலாத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதை என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
