×

தீபாவளிக்கு ‘வலிமை’வருவதில் சிக்கல் - அதிர்ச்சியில் தல ரசிகர்கள்
 

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் தீபாவளி அன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்க அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. அதன்பின்னர் சில காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. 

ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக எந்த நாட்டிற்கும் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, படப்பிடிப்புகள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்ட படி இப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் வலிமை மட்டுமில்லாமல், ரஜினியின் அண்ணாத்தே, சிம்புவின் மாநாடு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News