×

அப்போது ஏன் வாயை மூடிக்கிட்டு இருந்தீங்க?! - அரவிந்த்சாமியை விளாசும் தயாரிப்பாளர்

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமீபத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  இது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் இதன் மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் அரவிந்த்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘100 சதவீதத்தை விட 50 சதவீதமே சிறந்தது என நினைக்கும் நேரம் இருக்கிறது. தற்போது அதற்கான நேரம் இது’ என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி பட தயாரிப்பாளர் வினோத் மிகவும் அரவிந்த் சாமிக்கு காட்டமாக பதிலளித்துள்ளார். பேருந்துகளில் 100 சதவீதம் அனுமதிக்கப்பட்ட போது இதை ஏன் கூறவில்லை? ரயில்கள், விமானங்கள், மால்கள், டாஸ்மாக், அரசியல் கூட்டங்கள் மற்றும் விடுதிகள் போன்றவை முழுவதுமாக இயங்கும் போது சினிமா மட்டும் ஏன் இயங்கக் கூடாது? மக்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களுக்கு விருப்பமில்லை எனில் அவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், திரையுலகில் பலரும் அரவிந்த் சாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News