ரஜினி-டிஆருக்கு செய்த துரோகம்!.. மறக்க முடியாத சம்பவம்.. பிரபலம் சொன்ன தகவல்..
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகமாகி கொண்டு வருகிறது. ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். மக்களும் அதற்கு தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது டி.ராஜேந்திரன் "உயிருள்ளவரை உஷா" திரைப்படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த படத்தில் 'செயின் ஜெயபால்' கேரக்டரில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக அது நடக்காமல் போய்விட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு உண்மையில் ரஜினிக்கும், டி ராஜேந்தருக்கும் இடையில் என்ன மோதல் நடந்தது என்று விவரித்துள்ளார். அதில்
"ஒரு தலை ராகம் படத்தை எடுக்கும் பொழுது டி.ராஜேந்திரனை சினிமா துறை கிண்டல் செய்தது. யார்ரா இவரு? தாடியும், முடியும் இவர் நடித்தால் யார் பார்ப்பார்கள்? என்று விமர்சனங்கள் தொடர்ந்து வந்தது. ஆனால் அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இசை என எல்லாமே செய்து படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ”உயிருள்ளவரை உஷா” படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் உஷாவுக்கும், டிஆருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
”அது கடைசியில் திருமணத்தில் முடிந்தது. மனைவி உஷாவுக்காகவே அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த காலத்தில் பட்டித் தொட்டி எங்கும் இந்த படம் பேசப்பட்டது. உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் பிரஸ் மீட்டில் டிஆர், என் படத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார் என்று சொன்னபோது உண்மையில் எனக்கு வேதனையாக இருந்தது. அந்த காலத்தில் ரஜினி தொடர்ந்து பெரிய நிறுவனங்களுக்கு தான் தேதி கொடுத்துக் கொண்டிருந்தார். வளர்ந்து வரும் சிறு கம்பெனி படங்களில் நடிக்க மறுத்தார்”.
”ஆனால் ரஜினியின் முதல் 30 படங்களை தயாரித்தது சிறிய கம்பெனிகள் மட்டும் தான். எல்லாமே புதுப்புது தயாரிப்பாளர்கள், கஷ்டப்பட்டு தன் மனைவி தாலியை அடமானம் வைத்து தான் படம் எடுத்தார்கள். அப்படிப்பட்ட சின்ன தயாரிப்பாளர்களை ரஜினி தான் வளர்ந்த பிறகு தூக்கி போட்டது மிகப்பெரிய தப்பு. அப்படி செய்திருக்கக் கூடாது. ஆனால் அப்படி செய்தார் அதான் உண்மை. சின்ன பேனர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ரஜினி முதலில் சொல்லி இருக்கணும். பல வெற்றிகளை பார்த்து வளர்ந்த பின்பு சின்ன தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்வது கண்டிப்பாக சுயநலம்தான்”.
”தன்னுடைய மார்க்கெட்டை பாதுகாக்க ஒரு சுயநலவாதியாக செயல்பட்டுள்ளார் ரஜினி. இப்படி சின்ன தயாரிப்பாளருக்கு படம் நடிக்காத ரஜினி ’கை கொடுக்கும் கை’ படத்திற்காக விஜயகுமாருக்கு தேதி கொடுத்துள்ளார். இவரு சின்ன தயாரிப்பாளருக்கு தேதி கொடுக்க மாட்டாராம், ஆனால் விஜயகுமார் வந்து தேதி கேட்டதும் உடனே கொடுத்து விடுவாராம் இதில் என்ன நியாயம் இருக்கு. இதுதான் உங்கள் கொள்கையா? உங்க இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டு இருப்பீங்களா? இந்த இடத்தில் ரஜினி செய்தது தப்புதான்”. என்று கூறியுள்ளார்
