
Cinema News
விஜய் – SAC பிரிவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தான் காரணமா ? பிரச்சனைக்கான காரணத்தை கூறிய பிரபலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இன்று உச்சத்தில் இருக்கும் நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவரை தமிழ் சினிமா ஒதுக்கியது. பின்னர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். மக்கள் மத்தியில் விஜய் ஒரு ஹீரோவாக பதிவதற்கு அவரை வைத்து அடுத்தடுத்து படங்களை எடுத்தார்.
”செந்தூரப்பாண்டி” படத்தில் விஜயகாந்த் உடன் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவருடைய ரேஞ்ச் மாறியது. தொடர்ந்து தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். துப்பாக்கி படம் வரை விஜய்க்கு கதை கேட்பது சம்பளம் பேசுவது எல்லாம் எஸ்.ஏ.சந்திரசேகர் தான். அதன் பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு இச்சம்பத்தை பற்றி கூறியுள்ளார், ”துப்பாக்கி படத்தின் போது எஸ்.ஏ.சந்திரசேகர் தான் அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது. முருகதாஸும் இரண்டு பேர் கிட்டையும் கதை சொல்கிறார். உடனே எஸ்.ஏ.சி அட்வான்ஸ் கொடுத்து படத்தை தொடங்குகிறார். எஸ்.ஏ.சி கேரக்டரை பொறுத்தவரைக்கும் அவர் சில கருத்துக்களை கூறுவார். படத்தில் அவரின் தலையீடு கண்டிப்பாக இருக்கும்”.

“ஆனால் அதை இன்றைய காலத்து இளைஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றால் அதில் சந்தேகம் தான். அடிப்படையில் எஸ்.ஏ.சி நல்ல இயக்குனர் தான். அவருக்கு அனுபவம் உண்டு. இருந்தாலும் இந்தத் தலைமுறையினருக்கு அது எடுபடுமா? என்று பார்க்க வேண்டும். அதேபோல மற்ற இயக்குனர்கள் ஏதாவது கருத்துகள் சொல்லும் பொழுது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பொறுமையும் இன்றைய காலத்து இயக்குனர்களிடம் இல்லை. மேலும் எஸ்.ஏ.சி சொன்ன சில கருத்துக்களில் விஜயே உடன்பாடு இல்லாமல் போய்விட்டார்”.
”அப்போ சில விஷயங்களை எஸ்.ஏ.சி, முருகதாஸ் கிட்ட சொன்னாரு. அதை விஜய் கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொன்னாரு, ஆனால் முருகதாஸ் அதை அப்படியே விஜயிடம் போய் சொல்லிவிட்டார். விஜயும் அதை கண்டுக்காதீங்க அப்படின்னு சொல்லிட்டாரு. இதனால சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் முருகதாசுக்கும் மன வருத்தங்கள் இருந்துகிட்டு இருக்கு அது இன்னை வரைக்கும் இருக்கு”. என்று கூறியுள்ளார்.