Kangai Amaran: என்னது மனநலம் சரியில்லையா? கங்கை அமரனின் அடாவடி செயலால் கடுப்பான பிரபலம்
சமீபத்தில் கவிஞர் வாலிக்காக ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கங்கை அமரனுக்கு ஏதோ ஒரு விருதும் கொடுக்க கங்கை அமரன் அங்கு வந்திருந்தார். விழா முடிந்து பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த போது திடீரென கங்கை அமரன் டென்ஷனாகி மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அது சோசியல் மீடியாக்களில் வைரலானது.
இதை பற்றி பத்திரிக்கையாளர் ஜீவா மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஆகிய இருவரும் விவாதித்தனர். பின்னாடி முறைத்துக் கொண்டிருந்தார் என கங்கை அமரன் சொன்னது எப்படி சாத்தியமாகும். முன்னாடி இருந்து அந்த நபர் செய்திருந்தால் கங்கை அமரனுக்கு தெரியவரும். பின்னாடி அந்த நபர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது எப்படி அவருக்கு தெரியும். அப்போ வெளியில் அட்டென்ஷன் பெற வேண்டும் என்பதற்காகவே கங்கை அமரன் இப்படி செய்கிறார் என பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.
கங்கை அமரனை இன்னும் சில மாதங்களில் மறந்துவிடக் கூடிய நிலைமை கூட வந்துவிடும். அப்படி என்ன சாதனை செய்து விட்டார். கரகாட்டக்காரன் ஏதோ 400 நாள்கள் கடந்து ஓடிவிட்டது. அதுவும் தில்லானா மோகனாம்பாள் கதையை அப்படியே அந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி எடுத்தார். அவ்வளவுதான். மற்றபடி இளையராஜா மாதிரிலாம் பெருசா ஒன்னும் சாதனை செய்யவில்லை.
இப்போ கூட இளையராஜா தம்பி, வெங்கட் பிரபுவின் அப்பா, யுவன் சங்கர் ராஜாவின் சித்தப்பா என்று சொன்னால்தான் தெரியும். பொது மேடைகளில் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? இத்தனைக்கும் பின்னாடி இருந்த நபர் ஒரு அப்பாவி போலத்தான் இருந்தார். அவரை பிடிச்சு கங்கை அமரன் என் கூட சண்டைக்கு வாடா என்பது போல இருந்தது.

இவர் எப்பொழுதுமே இப்படித்தான். ஒரு ஆளுமையான நபர் போல என்றைக்காவது நடந்திருக்கிறாரா? இவருடைய பேச்சில் ஒரு கோமாளித்தனம் தான் இருக்கும். கோமாளிதான். இவரை விட புகழ் வாய்ந்த எத்தனையோ இசைக் கலைஞர்களை பார்த்திருக்கிறோம். இவர் மாதிரி யாரும் பேசியது இல்லை. ஒரு சமயம் இசையமைப்பாளர் சங்கர் கணேஷை கங்கை அமரன் பேட்டி எடுத்தார்.
சங்கர் கணேஷ் தயாரிப்பாளர் ஜிஎன் வேலுமணி மகளைத்தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அந்த பேட்டியில் ‘உங்கள் மனைவியை எங்கு பார்த்தீர்கள்? எப்படி பார்த்தீர்கள்? அப்புறம் என்ன நடந்துச்சு?’ என மேடைக்கு தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டார். மேலும் இளையராஜா வைரமுத்து சண்டையில் ‘உன்னை அறிமுகம் செய்ததே இளையராஜாதான். உன் பூஜை அறையில் இளையராஜா புகைப்படத்தை வைத்து வணங்கு’ என கூறியவர் கங்கை அமரன்.
இப்படி மேடை கிடைக்கும் போதெல்லாம் இப்படி பேசியே வைரலாக வேண்டும் என நினைக்கிறார் என பாலாஜி பிரபு கூறினார். ஒரு வேளை மன நலம் பாதிச்சிருக்குமோ என பத்திரிக்கையாளர் ஜீவா கேட்க, ‘அவருக்கு பாதிக்கல, நமக்கு பாதிக்க வைத்துவிடுவார்’ என பாலாஜி பிரபு கூறினார்.
