Categories: Cinema News latest news

ரஞ்சித் எடுத்த படத்திலேயே இதுதான் பிரமாண்டம்… தங்கலான் கதையை லீக் செய்த தயாரிப்பாளர்!..

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்தும் இயக்குனர்களில் இயக்குனர் ரஞ்சித்தும் முக்கியமானவர். வெற்றிமாறன், பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்து வருகின்றனர்.

சர்பாட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. ஆனால் இந்த படம் குறிப்பிடும்படியான வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்சமயம் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித்.

தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். பொதுவாகவே விக்ரம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்ககூடியவர். அதுவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புபவர் விக்ரம். அதற்கு தகுந்தாற் போல தங்கலான் திரைப்படத்தில் அவருக்கு கதாபாத்திரம் அமைந்துள்ளது.

தங்கலான் படத்தின் கதை:

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான தனஞ்செயன் ஒரு பேட்டியில் கூறும்போது தங்கலான் படம் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தார். கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்திற்கு அருகாமையில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுதான் தங்கலான் தயாராகிறது.

1980 களை சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நேர்த்தியாக காட்டியிருந்தார் பா.ரஞ்சித் இயக்கும் இந்த திரைப்படத்திலும் கூட அந்த நேர்த்தியை எதிர்பார்க்கலாம். தங்கலான் பா.ரஞ்சித்தின் கனவு படம் என கூறலாம். ஒரு மனிதனின் 70 வருட காலக்கட்டத்தை தங்கலான் திரைப்படம் நமக்கு காட்டுகிறது. 1870 முதல் 1940 வரை உள்ள காலக்கட்டத்தை தங்கலான் திரைப்படம் பதிவு செய்கிறது.

கோலார் தங்க சுரங்கம் எப்படி உருவானது. அதில் தங்கலானின் பங்கு என்ன என்பதை படம் பேசுகிறது. இவ்வாறு தனஞ்செயன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: 50 வயது நடிகருடன் டேட்டிங்கா? விஜய் பட கதாநாயகியை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

Rajkumar
Published by
Rajkumar