Categories: Cinema News latest news

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை!… விளாசும் தயாரிப்பாளர்…

தமிழ் சினிமாவை பொறுத்த வரை மார்க்கெட் ரொம்பவே பெருசு. ஆகையால் அதற்கேற்றவாறு ஹீரோக்களுக்கு
சம்பளத்திலிருந்து அவர்கள் பயன்படுத்தும் பொருள் வரை எல்லாமே படக்குழு முதலீடுதான்.கேரவன், மேக்கப், காஸ்டுயூம் எல்லாமே படம் சின்ன பட்ஜட் ஆனாலும் சரி அவர்கள் அதை பற்றி கவலைபடுவதே இல்லை. அவர்களுக்கு அவர்களுக்குரிய சம்பளம் வந்தாக வேண்டும். ஆனால் மற்ற மொழிப்படங்களில் உள்ள ஹீரோக்கள் அவ்வாறு செய்வதில்லை.

உதாரணத்துக்கு அண்மையில் இணையத்தில் உலா வரும் தகவல் கேஜிஎஃப் பட ஹீரோ யஷ் படம் ஆரம்பித்ததில் எந்த ஒரு சம்பள அட்வான்ஸும் வாங்க வில்லையாம். தன் சம்பளத்தில் 25% ஐ மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு மீதியை படத்தில் பயன்படுத்தும் தொழில்னுட்பத்திற்கு விட்டுக் கொடுத்து விட்டாராம்.

இப்படி சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியில் கூறுகையில் மலையாளத்தில் 3 கோடி செலவில் கம்மியான பட்ஜட்டில் ஹஸ்பண்ட் அண்ட் கோவா என்ற படத்தை எடுத்துள்ளார். அந்த படத்தில் நடித்த பிரபலங்கள் பட்ஜெ கம்மி ஆதலால் அவர்களுக்கு தேவையானதை குறைத்து விட்டார்களாம்.

கேரவன் வேணாம், பாத்ரூம் ஒரே பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிறோம் என கூறி விட்டார்களாம். மேலும் அவர் கூறுகையில் மலையாள சினிமாவில் தயாரிப்பாளர்களை காப்பாத்துவார்கள், ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி இல்லை என கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini