#image_title
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கங்குவா படம் பிரம்மாண்ட வெற்றி என்று போட்டிருப்பது ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கின்றது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் பார்த்து பார்த்து எடுக்கப்பட்டு வந்தது. நடிகர் சூர்யாவும் இந்த திரைப்படத்தை தவிர வேறு எந்த திரைப்படத்திலும் கவனம் செலுத்தாமல் மெனக்கட்டு நடித்து வந்தார்.
இதையும் படிங்க: இவன வச்சு எப்படி படம் எடுக்கிறது? சரி வராது.. சூர்யாவுக்காக பேச போய் திரும்பி வந்த சிவக்குமார்
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படம் வெளியாவதற்கு முன்பு நாளுக்கு நாள் இப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஏனென்றால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்று படம் குறித்து கொடுத்த பில்டப் அப்படி.
பீரியட் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் ட்ரெய்லரில் சூர்யாவின் தோற்றம், சண்டைக்காட்சிகள் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது. அதுமட்டுமா இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று கூறியதெல்லாம் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருந்தது.
தயாரிப்பாளர் தனது பங்குக்கு பேசிக் கொண்டிருக்கின்றார் என்று பார்த்தால் இந்த பக்கம் நடிகர் சூர்யா செல்லும் இடங்களில் எல்லாம் படம் குறித்து ஒரே புகழாரம் தான். இந்திய சினிமாவே இப்படத்தை வாயை பிளந்து பார்க்கும் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
1000ஆண்டுகளுக்கு முன் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டம் படத்தில் காட்டப்படுகின்றது. நிகழ்காலத்தில் இருக்கும் சூர்யா கவர்மெண்டால் கூட கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுக்கும் வேலை செய்பவர். ஆயிரம் காலத்திற்கும் முன் பெருமாட்சி என்ற பழங்குடி கிராமத்தின் தலைவராக இருப்பவர் கங்குவா. அவர்களின் தீவை ரோமானியர்கள் தங்கள் வசப்படுத்துகிறார்கள்.
அதிலிருந்து தங்களது இனத்தை கங்குவா காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. படத்தில் உள்ள கலைஞர்கள் அனைவரும் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் சிறுத்தை சிவா படத்தின் கதையில் கோட்டை விட்டுவிட்டார் என்று பலரும் இப்படம் குறித்து தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஆத்தாடி!.. ஒரே ஒரு பாட்டுக்கு 21 தடவையா?!… கங்குவா பட நடிகை பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!…
அதிலும் எதற்கு கத்துகிறார்கள் என்பது பல இடங்களில் புரியவில்லை. இவர்கள் போடும் சத்தத்தில் படத்தில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.
இப்படி ஒரு புறம் ஒரு படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களும், ட்ரோல்களும், மீம்ஸ்களும் சமூக வலைதள பக்கங்களில் குவிந்து வரும் நிலையில் தயாரிப்பாளர் தற்போது வெளியிட்டு இருக்கும் போஸ்டர் ரசிகர்களை மேலும் கோபம் அடைய செய்திருக்கின்றது. படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி.. கங்குவா கிராண்ட் சக்சஸ் என்று கூறியிருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஞானவேல் ராஜாவை திட்டி கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…