சிம்புவுடன் மோதல்.. தனுஷுடன் நட்பு!.. இவங்க ஃபிரண்ட்ஷிப் எங்கயோ இடிக்குது!...
தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியையும், குடைச்சலையும் கொடுப்பவர்தான் சிம்பு. ஷூட்டிங்கிற்கு சரியாக போக மாட்டார். டப்பிங்கிற்கு செல்ல மாட்டார். படம் பாதி வளர்ந்த நிலையில் பேசியதை விட அதிக சம்பளம் கேட்பார். இப்படி தன்னால் பல வகைகளிலும் குடைச்சலை கொடுத்து இனிமேல் சிம்புவை வைத்து படமே தயாரிக்க கூடாது என தயாரிப்பாளர் நினைக்கும்படி செய்துவிடுவார்.
அதனால்தான் சிம்புவை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும் முன்வருவதில்லை. அதேநேரம் திடீரென ஹிட் படத்தை கொடுத்து நானும் மார்க்கெட்டில் இருக்கிறேன் என காட்டிக்கொள்வார். விண்ணைத் தாண்டி வருவாயா, மாநாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டார் சிம்பு.
ஆனால் மாநாடு படத்திற்கு பின் வெளியான மூன்று படங்களும் சிம்புவுக்கு கை கொடுக்கவில்லை. ஒரு பக்கம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு இதுவரை சிம்பு கால்ஷூட் கொடுக்கவில்லை. அட்வான்ஸ் தொகை 4 கோடி வாங்கிவிட்டு நீதிமன்றத்தில் ஒரு கோடி என பொய் சொன்னார். ஆனால் அந்த ஒரு கோடியும் திருப்பிக் கொடுக்கவில்லை. வழக்கை வாபஸ் வாங்குங்கள்.. உங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன்’ என ஐசரி கணேஷனை சம்மதிக்க வைத்து வழக்கை வாபஸ் வாங்க வைத்தார். ஆனால், இதுவரை அவருக்கு கால்ஷூட் கொடுக்கவில்லை. எனவே சிம்பு மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஐசரி கணேஷ்.

எனவே வெற்றிமாறன் சிம்பு இணைந்துள்ள படம் வெளியாகும் போது ஐசரி கணேஷ் தரப்பில் குடைச்சல் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் சிம்புவின் போட்டி நடிகராக பார்க்கப்படும் தனுஷிடம் ஐசரி கணேஷ் நெருக்கம் காட்டி வருகிறாராம். அடிக்கடி இருவரும் செல்போனில் பேசிக் கொள்வது, நேரம் கிடைத்தால் சந்தித்துக் கொள்வது என அவர்கள் நெருக்கமாகி இருக்கிறார்கள்.
சமீபத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல் மியூசிக் என்கிற நிறுவனத்தை ஐசரி கணேஷ் துவங்கிய போது அந்த விழாவுக்கு தனுஷும் சென்றிருந்தார். அதோடு சுமார் 4 மணி நேரம் வரை அவர் ஐசரி கணேஷுடன் நேரம் செலவழித்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்புவை பிடிக்காமல் போனதால் தனுசுடன் ஐசரி கணேஷ் நெருக்கம் காட்டி வருகிறார் என்கிறது சினிமா வட்டாரம்.
