Categories: Cinema News latest news

லாபம் எதும் வேண்டாம்.. நீங்க நடிச்சா போதும்.. இப்படி கூறிய தயாரிப்பாளரிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய ரஜினி!..

தேவதையை கண்டேன், ஜனா போன்ற படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளரான காஜா மைதீன். தயாரிப்பு கவுன்சிலிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இப்பொழுது சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார்.தான் தயாரித்த சில படங்களால் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் தான் என்னை சினிமாவில் இருந்து விலக வைத்தது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக அஜித் நடித்த ஜனா படத்தால் தனக்கு 10 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த படத்திற்கு பிறகே தான் சினிமாவில் இருந்து ஒதுங்கியதாகவும் கூறியிருந்தார். மேலும் அவர் கம்பெனியில் ரஜினியை வைத்து எப்படியாவது ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாம்.

rajini1

ஒரு சமயம் ரஜினியிடம் அவரது மண்டபத்தில் காஜா மைதீன் கேட்டிருக்கிறார். எனக்கு லாபம் கிடைக்குதோ இல்லையோ உங்களை வைத்து ஒரு படம் பண்ணினேன் என்ற பெருமை இருந்தால் போதும் என்று ரஜினியிடம் கூறியிருக்கிறார். ரஜினி மிகவும் யோசித்து சரி கண்டிப்பாக பண்ணலாம் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இது செம காமெடி!..நீங்க செய்யக்கூடாது!.. ரஜினியை முகத்துக்கு நேராக கலாய்த்த ராதாரவி…

அதன் பின் ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமார் காஜாமைதீனின் கையை பிடித்து வாழ்த்துக்களோடு ரஜினி உங்களோடு பண்ண சம்மதம் தெரிவித்துவிட்டார், நான் தான் இயக்குனர் என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் காஜா மைதீன் ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நாள்கள் கூட நிலைக்கவில்லையாம்.

திடீரென ஏவிஎம் சரவணன் உடல் நிலை சரியில்லை என்று ரஜினி பார்க்கப் போக அவரின் நிலையை அறிந்து காஜா மைதீனிடம் பண்ணுவதாக சொன்ன கதைதான் அங்கு சிவாஜியாக உருவெடுத்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு காஜா மைதீனும் ரஜினியும் சேர்ந்து ஒரு படம் கூட பண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை காஜா மைதீன் ஒரு பேட்டியின் போது கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini