அஜித் படம் வருதுனு தெரிஞ்சும் மோதுறது தற்கொலைக்கு சமம்.. இவரே இப்படி சொல்றாரே

by Rohini |   ( Updated:2025-01-05 10:30:15  )
vidamuyarchi
X

vidamuyarchi

தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப் போனது பல படங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. கிட்டத்தட்ட 10 படங்கள் வரிசையாக பொங்கலுக்கு ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. அஜித்தின் படம் ரிலீஸ் ஆகிறது என்றதும் ஒரு சில படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை தாமதப்படுத்தினார்கள். ஏன் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் வீர தீர சூரன் திரைப்படமும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதிக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தது.

ஏன் அஜித்தின் படம் என்றால் மற்ற படங்கள் அஜித்தின் படங்களுடன் போட்டி போட தயங்குகிறார்கள் என அனைவரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அஜித்தின் ஃபேன்ஸ் பாலோயர்ஸ் என்பது உலகளவு. அவரின் ரசிகர் படைபலம் என்பது வலிமையானது. அஜித் ரசிகர்களை சந்திக்கிறாரோ இல்லையோ அவருக்குண்டான கிரேஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

ஏன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் இருக்கின்றன. இதை பற்றி பிரபல திரைப்படம் வினியோகஸ்தரும் தயாரிப்பாளருமான கே. ஆர் கூட ஒரு மேடையில் பேசும் போது அஜித்தின் படத்தோடு மோதுவது என்பது தற்கொலைக்கு சமம் என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் ஒரு பேட்டியில் அஜித்தின் பலம் தெரிந்தே நாம் மோதக் கூடாது என கூறியிருப்பார்.

அந்தளவுக்கு சினிமாவில் அஜித் மிகப்பெரிய அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அஜித்தின் ரசிகர்கள்தான். இப்போது விடாமுயற்சி பட ரிலீஸ் தள்ளிப் போனதும் அந்தப் படத்திற்கு கூடுதல் பிளஸ்தான். ஏனெனில் விடாமுயற்சி படம் தள்ளிப் போய்விட்டது என இணையதளத்தில் முழுக்க முழுக்க அந்தப் படத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.

KR

இதுவும் அந்தப் படத்திற்கான ஒரு வித புரோமோஷன் தான். இதுவும் ஒரு வித ஹைப்பை விடாமுயற்சி படத்திற்கு ஏற்படுத்துகிறது. இன்னும் விடாமுயற்சி படம் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் அந்தப் படத்திற்கு இனிமேல் விளம்பரம் தேவைப்படாது என்பதை உறுதியாக சொல்லலாம்.

Next Story