Categories: latest news throwback stories

தங்கமகன் படத்துல ரஜினி செய்த அந்தக் காரியம்… தயாரிப்பாளர் வயித்துல பாலை வார்த்துட்டாரே..!

தன்னால தயாரிப்பாளர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் வந்து விடக்கூடாதுன்னு நினைப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அதனால தான் அவர் இன்னும் சிங்கம் மாதிரி திரையுலகில் உலா வருகிறார். அவரைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…

ரஜினி சார் இவ்ளோ காலம் நிலைச்சி நிக்கிறாரு. 72 வயசுலயும் சிங்க நடை போடுறாரு. அவரு கால்ஷீட் கொடுத்தா தவறுவதே இல்ல. வேறு படத்துக்குப் போறதே இல்லை. காலை ஏழரை மணிக்கு எல்லாம் மேக்கப் போட்டுருவாரு. அஞ்சு நிமிஷம் டைம் கூட வேஸ்ட் பண்ண மாட்டாரு.

கேரவன்ல போய் உட்கார்ந்துக்கிட்டு சீட்டாடுறது, போன் பேசறதுன்னு எதுவுமே கிடையாது. தங்கமகன்னு ஒரு படம். ஆர்.எம்.வீரப்பன். சத்யா மூவீஸ். வெற்றிகரமான படம். அதுல ரஜினி நடிச்சாரு. நடிக்கும்போது உடம்பு சரியில்லாம 3 மாசம் சிகிச்சைல இருக்காரு.

பிறகு சரியாகுறாரு. கால்ஷீட் கொடுக்காரு. படம் முடியுது. படம் சக்சஸ். அவங்க பாக்கித் தொகையை ரஜினிக்குத் தரணும். அதைக் கொண்டு போய் சத்யஜோதி தியாகராஜன் ரஜினி சார் வீட்டுக்குப் போய் கொடுக்கிறாரு.

Thangamagan

அப்போவே 10 லட்சத்துக்கு மேல கொடுக்காரு. 3 நாள் கழித்து ரஜினியோட நண்பர்கள் இருவர் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு வர்றாங்க. தியாகராஜன் கொடுத்த பெட்டியோட ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு வர்றாங்க. ‘ஐயா இதை வச்சிக்கோங்க. ரஜினி சாரோட சம்பளத்தைத் தானே கொடுத்தேன்’னு தியாகராஜன் சொல்றாரு.

‘இல்ல வேண்டாம்னுட்டாரு. அந்த 3 மாசம் உடம்பு சரியில்லாம இருந்தப்போ எவ்வளவு வட்டி நஷ்டம் ஏற்பட்டுருக்கும். செலவு எவ்வளவு ஆகியிருக்கும்? அதுக்காக இந்தப் பணத்தை நீங்களே வச்சிக்கோங்கன்னு திருப்பிக் கொடுத்துட்டாரு’ன்னு சொன்னாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம்சரண், பிரபாஸ் கூட அவங்களோட தோல்விப்படங்களுக்காக தனது சம்பளத்தையே திருப்பிக் கொடுத்தாங்களாம். என்னை நம்பி படத்தை எடுக்கிறாங்க. விநியோகஸ்தர் நஷ்டமாகிட்டாங்க. அதனால அவங்ககிட்ட இந்தப் பணத்தைக் கொடுங்கன்னு சொன்னாங்களாம். அதனால தான் அங்கெல்லாம் சினிமா ஆரோக்கியமா இருக்குதாம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v