
Cinema News
எஸ்.ஏ.சியை உள்ளே விட்டது தப்பா போச்சு!. விஜயின் தோல்வி பட தயாரிப்பாளர் புலம்பல்…
இன்று தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருக்கும் சில பேர் பெரும்பாலும் வாரிசு நடிகர்களாகவே வந்தவர்கள்தான். குறிப்பாக விஜய், சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, கௌதம் கார்த்திக், சிம்பு, தனுஷ் என பல பேரை குறிப்பிடலாம். இவர்கள் பெரும்பாலும் சினிமா பின்புலத்தால் மட்டுமே ஜெயிக்க முடிந்தது.

vijay1
இவர் இல்லையென்றால் விஜய் இல்லை
அச்சாணி என்பது அவர்களின் சினிமா பின்புலம் என்றாலும் இத்தகைய பெரும் வளர்ச்சிக்கு அவர்களின் கடின உழைப்பே காரணமாக இருந்து வருகிறது. நடிகர் விஜயை எடுத்துக் கொண்டால் முழுக்க முழுக்க அவரது தந்தையான எஸ்.ஏ.சியால் மட்டுமே சினிமாவில் நடிக்க வர முடிந்தது.
ஒரு தவிர்க்க முடியாத இயக்குனரின் மகன் என்று தெரிந்தும் கூட ஆரம்பத்தில் ஒரு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் விஜயை புறக்கணிக்கத்தான் செய்தார்கள். அதனால் நாமே விஜயை வைத்து படத்தை இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்து ஒரு சில படங்களை இயக்கினார் எஸ்.ஏ.சி.

vijay2
காத்திருக்கும் விஜய்
இப்படி படிப்படியாக வளர்ந்து இன்று அரசியலிலும் தன்னுடைய ஆளுமையை காட்ட காத்திருக்கிறார் என்றால் முழுவதும் அது விஜயை மட்டுமே சேரும். இன்று தமிழ் நாடே விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கிறது. அரசியலிலும் ஆதிக்கத்தை செலுத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படம். விஜய் நடிக்க வந்து 3 வருடங்களில் வெளிப்புற தயாரிப்பில் நடித்த முதல் திரைப்படம். இந்த படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்தார். இவர் ஏற்கெனவே வேட்டையாடு விளையாடு, வித்தகன், சீனு, கூலி போன்ற பல படங்களை தயாரித்தவர்.
இவர் எடுத்த ஒரு சில படங்கள் தான் இவருக்கு லாபத்தை கொடுத்திருக்கின்றன. மற்றபடி நஷ்டங்களை சந்தித்தவர்தான் இந்த மாணிக்கம் நாராயணன். அதனால் சினிமா என்பது ஒரு மாயை என்று கூறினார். மேலும் இருக்கும் போதே பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

vijay3
ரஜினி மாதிரி இருக்கனும்
உதாரணமாக ரஜினி சுற்றி சுற்றி நிறைய இடங்களில் நிலத்தை வாங்கி, வீட்டை வாங்கி போட்டு வைத்திருக்கிறார். ஒரு வேளை சினிமாவிற்கு அப்புறம் அவருக்கு அந்த இடங்கள் தான் உதவியாக இருக்கும் என்றும் மாணிக்கம் நாராயணன் கூறினார். ஆனால் மாண்புமிகு மாணவன் படம் ஓட வேண்டிய படம். ஆனால் அதை எஸ்.ஏ.சியை வைத்து எடுக்கச் சொன்னதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் மாணிக்கம் நாராயணன் கூறினார்.
ஒரு வேளை அந்தப் படத்தை வெறொரு இயக்குனரை வைத்து எடுத்திருந்தால் படம் கண்டிப்பாக ஓடியிருக்கும் என்றும் கூறினார். மற்றபடி தயாரிப்பாளருக்கு எந்த ஒரு விதத்திலும் குடைச்சல் கொடுத்தாவர் எஸ்.ஏ.சி என்றும் கூறினார்.