vadivelu
பிரபல சினிமா தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கங்குவா படத்தை பற்றி அவருடைய கருத்தை கூறியிருக்கிறார் .அதுதான் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. அதாவது கங்குவா படத்தின் தோல்விக்கு விமர்சனங்கள் தான் காரணம் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதைப்பற்றி மாணிக்கம் நாராயணனிடம் கேட்டபோது படம் ஒழுங்காக இருந்தால் யார் விமர்சிக்க போறாங்க.
இந்த அளவுக்கு விமர்சிக்கிறாங்க அப்படின்னா படத்தின் கதைதானே காரணம். அப்ப அந்த படத்தை ஒழுங்கா எடுக்கல. இயக்குனரையும் தயாரிப்பாளரையும் போய் தான் கேட்க வேண்டும் .படத்தை குப்பை மாதிரி எடுத்துட்டு விமர்சிக்கிறாங்க அப்படின்னு கத்துனா என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பி இருக்கிறார் மாணிக்கம் நாராயணன் .
இதையும் படிங்க: கங்குவாவைக் காப்பாற்ற குடும்பமே போட்ட சதித்திட்டம்? பிரபலம் எழுப்பிய சூடான கேள்வி
அதைப்போல படம் பாக்குற மாதிரி இருக்கணும். முழுவதும் முகத்தை மூடிக்கொண்டு எந்திரன் படத்தில் அக்ஷய் குமார் முகத்தை முழுவதுமாக மறைத்து விட்டு காட்டி இருப்பார்கள். அது என்ன படம் மாதிரியா இருந்துச்சு. அதேபோல ரஜினியை வைத்து அவருடைய மகள் ஒரு படத்தை எடுத்தார். அது பொம்மை படம் மாதிரி இருந்தது. உயிரோட தானே இருக்காரு அந்த ஆளு .
indira
அவர வச்சு ஒழுங்கான ஒரு கதையை எடுக்க வேண்டியதுதானே. அப்படித்தான் இருக்கிறது கங்குவா திரைப்படமும் என கூறி இருக்கிறார் மாணிக்கம் நாராயணன் .அதைப்போல கங்குவா படத்தில் அதிக இரைச்சலுடன் ஒலி கேட்பதாக சொன்னார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டபோது அதற்கும் மாணிக்க நாராயணன் நான் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை எடுத்தேன்.
இதையும் படிங்க: கங்குவாவைக் காப்பாற்ற குடும்பமே போட்ட சதித்திட்டம்? பிரபலம் எழுப்பிய சூடான கேள்வி
இந்திரலோகத்தில் நா அழகப்பன். அந்தப் படத்தில் டம் டும் என கேட்டுக் கொண்டே இருக்கும். நான் பலமுறை சொல்லியும் யாரும் அதை குறைப்பதாக இல்லை. கடைசியில் படம் எப்படி வந்தது .அந்த படத்தை எடுத்த தம்பி ராமையா உண்மையிலேயே நல்ல மனிதர். ஆனால் படம் வேற மாதிரி போச்சு. அதனால எனக்கு தான் நஷ்டம். அதுவும் அந்த நேரத்தில் வடிவேலு தான் இவ்வளவுத்துக்கும் காரணம் என சொன்னார்கள். நான் இதைப் பற்றி வடிவேலுவிடம் கேட்கவே இல்லை. காமெடியனாக நடிக்கிற வரைக்கும் ஒழுங்காகத்தான் இருப்பார்கள். அதன்பிறகு ஹீரோவாகிவிட்டால் கெத்தை காட்டி விடுவார்கள் என மாணிக்கம் நாராயணன் வடிவேலுவை பற்றி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…