
Cinema News
விஜய் என்னை மதிக்கிறதே இல்லை.. அது துரோகத்தின் உச்சகட்டம்!.. வேதனையில் புலி பட தயாரிப்பாளர்
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி மற்றும் கிச்சா சுதீப் ஆகிய நடிப்பில் உருவான திரைப்படம் புலி. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருப்பார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் அசத்தலாக வந்திருக்கும். அதுவரை அதிரடி கமர்சியல் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் குழந்தைகளுக்கான பேண்டஸி திரைப்படத்தில் முதல் முறையாக நடித்தார்.
படம் முழுக்க பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தை பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்திருப்பார். விஜய் உடன் நாளைய தீர்ப்பு படத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும் செல்வகுமார் புலி படத்தின் மூலம் முதல் முதலாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். சினிமாவில் நீண்ட நாட்களாக விஜய் மாதிரி ஒரு ஹீரோவுடன் பயணிக்கும் போது அவரை வைத்து தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வருவது இயல்புதான்.

இவரும் அந்த ஆசையில் விஜயின் புலி படத்தை தயாரித்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார். படம் அட்டர் பிளாப் இதனால் விஜய் என்னை நடத்திய விதம்தான் என்னை கவலையில் வாழ்த்தியது என்று மனம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் பிடி செல்வகுமார் மேலும் அவர் கூறுகையில் , ”விஜய் என்னை திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு கூப்பிட்டு சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன். குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி அது இருக்கும். அந்த படத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்”.
”முதலில் புலி கதையில் வில்லி கதாபாத்திரத்தில் ஷோபனா போடப்பட்டிருந்தது, தளபதி கதாபாத்திரத்தில் நாசர் போடப்பட்டிருந்தது. நான் தான் கொஞ்சம் புதுசாக இருக்க வேண்டும் என்று அவர்கள் இருவரையும் வேண்டாம் என்று சொல்லி பாம்பே சென்று ஸ்ரீதேவியிடம் கதையை சொல்லி அவரை புக் செய்து, அதன் பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் சுதிப்பை புக் செய்தேன். சண்டைக் காட்சிகளுக்கு ஹாலிவுட்டில் இருந்து ஆட்களை வரவழைத்து. அப்படி பிரம்மாண்டமாக முதல் பான் இந்தியா படம் எடுத்தது நான்தான்”.

’முதல்முறையாக அந்த படத்திற்கு 100 கோடி பிசினஸ் நடந்தது. சிம்பு தேவனின் முந்தைய இரு படங்களும் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த சாயல் புலி படத்தில் இருக்க கூடாது என்று பயங்கரமாக வேலை செய்தோம். மனிதர்களுக்கு நல்ல நேரமும் வரும் கெட்ட நேரமும் வரும். என்னுடைய கெட்ட நேரம் விஜய் எப்பொழுதும் பிடி செல்வகுமார் உடனே இருக்கிறாரே அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு சிலர் துன்புறுத்தல்கள் கொடுக்க ஆரம்பித்தனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தின நாள் இன்கம் டேக்ஸ் ரைடு என் வீட்டில் நடந்தது”.
’இது எந்த ஒரு எதிரிக்கும் துரோகிக்கும் நடக்க கூடாத செயல். அது துரோகத்தின் உச்சக்கட்டம். கூட இருந்தவர்களே என்னை சதியில் சிக்க வைத்து விட்டனர். அந்த நேரத்தில் என் கனவுகள் சுக்கு நூறாக்கப்படுகிறது. சன் டிவியில் நாளை புலி படம் ரிலீஸ் ஆகாது என்று செய்தி வருகிறது. இருந்தாலும் பல பிரச்சினைகளை சமாளித்தேன். நாளைக்கு படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்று முனைப்போடு கடுமையாக வேலை பார்த்தேன். ஆனால் அப்படி ரிலீஸ் செய்து படம் அட்டர் பிளாப் ஆனது. எனக்கு பல பிரச்சினைகள் ஆனால் விஜய்க்கு அடுத்த படத்திற்கான சம்பளம் இரண்டு மடங்காக உயர்கிறது”.
”தயாரிப்பாளர் தாணு, புலி படத்திற்கு நான் கொடுத்த சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுத்து அடுத்த படத்திற்கு புக் செய்து விட்டார். ஆனால் என்னை துரோகியாக, தோல்வி அடைந்தவனாக, அவமானப்பட்டவனாக விஜய் என்னை ஒதுக்கினார்”. என்று வேதனையுடன் புலி படத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.