Categories: Cinema News latest news

பாலிவுட்டில் சுஷாந்துக்கு நடந்த மாதிரி தமிழில் அந்த ஹீரோவுக்கு நடந்துச்சு…. பிரபல தயாரிப்பாளர் பகீர் தகவல்…!

பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் என்றால் அது இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை தான். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சொந்த முயற்சியால் முன்னேறிய சுஷாந்தை வளர விடாமல் சிலர் செய்த சூழ்ச்சி காரணமாக அது தற்கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் சுஷாந்த் சிங்குக்கு நடந்தது போலவே தமிழிலும் ஒரு நடிகருக்கு நடந்ததாக தயாரிப்பாளர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதன்படி பேட்டி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் ரவீந்தர் தான் இந்த தகவலை கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. அவர் மிக குறுகிய காலத்திலேயே முன்னேறியதால் அது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் பல வழிகளில் அவருக்கு பிரச்சனை கொடுத்தனர்.

பாலிவுட் சினிமாவில் சுஷாந்த்துக்கு நடந்த மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் கொடுமைகள் நடந்தது. ஆனால் அவர் படித்தவர், விவரமானவர் என்பதால் சாமர்த்தியமாக கையாண்டார். வேறு எந்த நடிகருக்கும் அவ்வளவு கொடுமைகள் நடந்ததில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக ஒரு முறை மேடை ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் தருகிறீர்கள் என கண்ணீர் விட்டு அழுதிருப்பார். தற்போது ரவீந்தர் கூறியுள்ளதையும் அந்த சம்பவத்தையும் பார்க்கும்போது இது உண்யையாக இருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்