சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி கார் விபத்தில் மரணம்!. திரையுலகினர் இரங்கல்…

 
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி கார் விபத்தில் மரணம்!. திரையுலகினர் இரங்கல்…

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 1988ம் வருடம் முதல் திரைப்படங்களை தயாரித்து வருபவர் ஆர்.பி சவுத்ரி. தமிழில் புது வசந்தம் இந்நிறுவனத்தின் முதல் படமாக அமைந்தது. இந்த படத்தில்தான் இயக்குனர் விக்ரமன் அறிமுகமானார். அதன்பின் புரியாத புதிர், சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

பல புதிய இயக்குனர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் ஆர்.பி.சவுத்ரி. விஜயை வைத்து பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா ஆகிய திரைப்படங்களை இவர் தயாரித்திருக்கிறார். இவரின் மகன் ஜீவா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் ஏற்பட்ட கார் விபத்தில் ஆர்.பி சவுத்ரி மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திரையுலகில் 99 இயக்குனர்களை இவர் அறிமுகம் செய்திருக்கிறார். இவரின் மரணம் ஈடு செய்யமுடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. நாளை அவரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்படவிருக்கிறது. ஆர்.பி.சவுத்ரியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web