Categories: Cinema News latest news throwback stories

நம்புனா நம்புங்க… விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுதான்… அடித்து சொல்லும் தயாரிப்பாளர்

அஜீத் நடித்து வரும் விடாமுயற்சி ‘இழு இழு’ என்று இழுத்துக் கொண்டே போகிறது. இடையிடையே பல்வேறு பிரச்சனைகள் கிளம்பி அடங்கின. இந்தப் படம் அஜர்பைஜான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளன. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் வலைதளங்களில் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க… நோகாம நடிச்சு 250 கோடியை சுருட்டிட்டு போகவா? ‘கூலி’ படத்தில் ரஜினிக்காக லோகேஷ் போட்ட ப்ளான்

அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி இந்த ஆண்டு இறுதிக்குள் வந்து விடுமா என தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கேட்க, இந்த ஆண்டு தீபாவளிக்கு கண்டிப்பா வரும் என்று உற்சாகம் பொங்க சொல்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

அந்த டீம் எப்படி பிளான் பண்ணிருக்காங்கன்னா இந்த 24ம் தேதி ஆரம்பிச்சி ஜூலைக்குள்ள அஜீத் நடிச்சி முடிச்சிடுவாரு. அதுக்கு அப்புறம் இன்னொரு பத்து நாள் சூட்டிங். அதோடு படமே முடிஞ்சிடுது. மகிழ்திருமேனி சார் சொல்றது இதுதான். எனக்கு நான் ஸ்டாப்பா சூட்டிங் நடத்த அனுமதிச்சா 40 நாள்ல படத்தை முடிச்சிடுவேன்னு சொல்லிருக்காரு.

பேட்ச் ஒர்க் சேர்த்து 45 நாள்ல படம் முடிஞ்சிடும். ஜூலை 15க்குள்ள படம் ஓவர். கம்ப்ளீட்டா இப்ப வரைக்கும் எடுத்ததை எல்லாம் எடிட் பண்ணிட்டாங்க. டப்பிங் மட்டும் தான் பாக்கி.

எடிட் பண்ணி எல்லாம் ரெடியா இருக்காங்க. இப்ப என்ன நடக்குன்னா ஸ்பாட் எடிட்டிங். அங்கேயே பைனல் வரை நடந்து முடிஞ்சுடுது. இப்ப வந்த உடனே டப்பிங் பண்ணி விஎப்எக்ஸ் எல்லாம் போயிக்கிட்டு இருக்கு. உடனே ரிலீஸ்சுக்குப் போகத் தயாரா இருக்காங்க.

இதையும் படிங்க… ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?

அஜீத் சாரைப் பொருத்தவரை இந்தப் படத்தைத் தீபாவளிக்குக் கண்டிப்பா கொண்டு வந்துடணும்னு உறுதியா இருக்காரு. தயாரிப்பு தரப்புல எந்தப் பிரச்சனையும் வராம இருந்தா கண்டிப்பா தீபாவளிக்கு வந்துடும். அதுக்கான முன்னேற்பாடுகள்ல தான் அந்த டீமும் இருக்கு. எல்லாருமே தயாரா இருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v