Connect with us
Sivaji Ganesan

Cinema News

சிவாஜியின் ஆக்டிங் ஸ்டைலை மாற்ற தயாரிப்பாளர் செய்த யுக்தி… எப்படியெல்லாம் மெனக்கெட்ருக்காங்க பாருங்க!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1966 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மோட்டார் சுந்தரம் பிள்ளை”. இதில் சிவாஜி கணேசனுடன் ரவிச்சந்திரன், ஜெயலலிதா, சௌகார் ஜானகி போன்ற பலரும் நடித்திருந்தார்கள்.

இத்திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பாளரான எஸ்.எஸ்.வாசன் தயாரித்திருந்தார். எஸ்.எஸ்.பாலன்  இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் டைட்டிலான “மோட்டார் சுந்தரம் பிள்ளை” கதாப்பாத்திரத்திலேயே சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.

Motor Sundaram Pillai

Motor Sundaram Pillai

இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக சிவாஜி கணேசனின் வித்தியாசமான நடிப்பு பார்வையாளர்களை வியக்க வைத்தது. சிவாஜி கணேசனின் அற்புதமான நடிப்பு, இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

இத்திரைப்படத்தில் வழக்கமாக இல்லாமல் சிவாஜியின் மாறுபட்ட நடிப்பை கொண்டுவர வேண்டும் என முடிவு செய்தாராம் எஸ்.எஸ்.வாசன். இதற்காக அவர் செய்த மெனக்கெடல் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.

SS Vasan

SS Vasan

அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் இதில் நடிக்க இருந்த ஜெயலலிதா, சௌகார் ஜானகி, ரவிச்சந்திரன், ஆகிய பலரையும் அழைத்த எஸ்.எஸ்.வாசன், இத்திரைப்படத்தில் அவர்கள் பேசவேண்டிய வசனங்களையும், காட்சிகளையும் முன்னமே நண்றாக ஒத்திகை பார்க்கச் சொன்னாராம்.

“நீங்கள் அனைவரும் உங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்யுங்கள். படப்பிடிப்பின்போது உங்களை நான் கவனிக்கமுடியாது. என்னுடைய முழு கவனமும் சிவாஜி கணேசனிடம்தான் இருக்கும். சிவாஜியிடம் இருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதுதான் என்னுடைய வேலையாக இருக்கும்” என அவர்களிடம் கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க: “இன்னைக்கு ஒரு சோகக் காட்சி இருக்கு”… படப்பிடிப்புக்குச் செல்லும்போதே சோகமான மனிதராக மாறிய நடிகர்… டெடிகேஷன்னா இதுதான்!!

Sivaji Ganesan

Sivaji Ganesan

அதன் பிறகு படப்பிடிப்பில் சிவாஜியின் நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தினாராம் வாசன். இந்த முயற்சியினால்தான் சிவாஜி கணேசன் தன்னுடைய மாறுபட்ட நடிப்பை அந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தாராம்.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top