Categories: Cinema News latest news throwback stories

சிவாஜி நடித்த படத்திற்கு சில்க் ஸ்மிதாவை வைத்து புரொமோஷன் செய்த தயாரிப்பாளர்…

1980களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் கவர்ச்சிப் புயலாகவும் திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களை தனது கட்டழகின் மூலம் ஆட்டிப்படைத்தவராக திகழ்ந்தார்.

ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா மிகவும் செல்வாக்குள்ள நடிகையாக வலம் வந்தார். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார் சில்க் ஸ்மிதா. அவர் புகைப்படத்தை பயன்படுத்தினாலே இளைஞர்கள் கூட்டம் அத்திரைப்படத்திற்கு திரையரங்குகளில் முந்தியடித்தது.

Silk Smitha

அவ்வாறு பல ரசிகர்களின் இதயங்களில் குடியிருந்த சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி சினிமா திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதனிடையே சில்க் ஸ்மிதா மிகப் பிரபலமான நடிகையாக இருந்த காலகட்டத்தில் சிவாஜி படத்தின் புரோமோஷனுக்காக அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம்!

Paritchaiku Neramachu

1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “பரிட்சைக்கு நேரமாச்சு”. இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் சுஜாதா, ஒய்.ஜி.மகேந்திரன், சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் இத்திரைப்படம் வெளிவந்தபோது இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய பேன்னர் ஒன்று வைக்கப்பட்டிருந்ததாம்.

Puliyur Saroja

அந்த பேன்னரில் சில்க் ஸ்மிதா கவர்ச்சியாக நிற்கும் புகைப்படத்தை மேலே அச்சிட்டு, கீழே சிவாஜி கணேசனின் புகைப்படத்தை அச்சிட்டிருந்தார்களாம். இதனை பார்த்த நடன இயக்குனர் புலியூர் சரோஜா, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசனை சந்தித்து, “சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர். அவர் புகைப்படத்தை கீழே போட்டுவிட்டு, மேலே சில்க் போட்டோவை போட்ருக்கீங்களே” என கேட்டிருக்கிறார்.

Silk Smitha

அதற்கு முக்தா சீனிவாசன், “இங்க பாரு. உனக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது. அந்தந்த சீசன்ல யார் யாரை வச்சு விளம்பரப்படுத்தனுமோ அவங்களை பயன்படுத்துனாதான் படம் சிறப்பாக ஓடும். அதனால் நீ பேசாம இரு” என கூறிவிட்டாராம். இவ்வாறு சிவாஜி படத்திற்கு சில்க் ஸ்மிதாவை வைத்து புரோமோஷன் செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவிடம் இருந்து பிரிந்ததுக்கு இதுதான் காரணம்!! இசைஞானி கொஞ்சம் மனசு வச்சிருக்கலாமோ?…

Arun Prasad
Published by
Arun Prasad