×

கொரோனாவில் இருந்து பாதுகாக்க… நீலாம்பரியாக இருங்கள் – வைரலாகும் மீம் !

படையப்பா படத்தில் நீலாம்பரி தனது அறைக்குள்ளேயே இருப்பது போல எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்ற மீம் சமுகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

 

உலகமே கொரோனா வைரஸுக்குப் பயந்து தங்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கி தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறது. இது சம்மந்தமாக மக்களுக்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் இதை வேறு விதமாக தெரிவித்து வருகின்றனர்.

படையப்பா படத்தின் வில்லியான நீலாம்பரி 18 வருடமாக தனது அறைக்குள்ள்யே முடங்கிக் கிடப்பதைக் குறிப்பிட்டு நீலாம்பரி போல இருங்கள் என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். அந்த மீம்ஸில் ‘இவர் நீலாம்பரி. இவர் நிலைமையைப் புரிந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே தங்கி இருந்தார். நீலாம்பரி தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். மக்களிடம் இருந்து பல அடிகள் தொலைவிலேயே இருந்தார். நீங்களும் நீலாம்பரி போல இருங்கள்எனத் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News