×

உங்கள் இயக்கத்தில் நடிப்பது பெருமை... உருகும் நடிகர் ஹரீஸ் கல்யாண்

 

தமிழில் பொறியாளன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஹரீஸ் கல்யாண். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமே காதல் படத்தில் நடித்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் இஸ்பேர் ராஜவும் இதய ராணியும், தாரள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், இயக்குனர் சசி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் ‘உங்கள் திரைப்படங்களை பார்த்துள்ளேன். உங்களின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறேன்.  இது பெருமையாக இருக்கிறது. நன்றி.. படப்பிடிப்பு எப்போது துவங்கும் என ஆர்வமாக இருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News