தந்தையாக விஜய் தோற்றுவிட்டார்!- மகனுக்கு உதவியிருக்க வேண்டாமா?.. உண்மையை உடைத்த பி.டி. செல்வக்குமார்!

 
தந்தையாக விஜய் தோற்றுவிட்டார்!- மகனுக்கு உதவியிருக்க வேண்டாமா?.. உண்மையை உடைத்த பி.டி. செல்வக்குமார்!

விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சய்யின் சினிமா வாழ்க்கைக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனவும், ஒரு தந்தையாக அவர் தோற்றுவிட்டதாகவும் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் தற்போது தனது முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தி வருகிறார். மாற்று அரசியல் முன்னெடுப்பதாகக் கூறி தீவிரமாகச் செயல்பட்டு வரும் அவர் மீது, அவரது முன்னாள் மேலாளரும், 'புலி' படத்தின் தயாரிப்பாளருமான பி.டி. செல்வக்குமார் முன்வைத்துள்ள குடும்பம் சார்ந்த விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தையாக விஜய் தோற்றுவிட்டார்!- மகனுக்கு உதவியிருக்க வேண்டாமா?.. உண்மையை உடைத்த பி.டி. செல்வக்குமார்!

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் உலா வந்தன. அதனை உண்மையாக்கும் விதமாக கடந்த மாதம் சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். அந்த விவாகரத்து மனுவில் தனது கணவர் விஜய் வேறு இரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும், கூறியிருந்தார். அந்த விவகாரம் அடங்கும் முன்பே விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரு திருமண விழாவிற்கு சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவரது அரசியல் வாழ்விலும் ஒரு சறுக்கலை ஏற்படுத்தியது. பெற்றோர் இடையேயான இடைவெளியும், குடும்பத்தில் உள்ள ஈகோ பிரச்சனைகளுமே ஜேசன் சஞ்சய்யின் திரைப்பயணத்தை பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் சிக்மா என்ர படத்தி இயக்கி முடித்தார். ஆனாலும் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

இது குறித்துப் விஜயின் முன்னாள் மேலாலரும் புலி படத்தயாரிப்பாளருமான பி.டி. செல்வக்குமார், "விஜய்யின் பையன் ஜேசன் சஞ்சய் படம் எடுக்கத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது. அவரை நேரில் அழைத்து என்ன பிரச்சனை, என்ன உதவி வேண்டும் என்று விஜய் கேட்டிருக்க வேண்டாமா? அன்று எஸ்.ஏ. சந்திரசேகர் மட்டும் 'என் பிள்ளை தானாக வளரட்டும்' என்று நினைத்து அமைதியாக இருந்திருந்தால், இப்போது விஜய் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டிருக்க முடியுமா? ஒரு தந்தையாக விஜய் தோற்றுவிட்டார் எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

From Around the web