×

அபராதம் விதித்த அரசு ஊழியர்... அறிவாளால் வெட்டிய மீனவர்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராச்சியி பழைய பேருந்து நிலையம் அருகே கல்விப்பிரியன் என்பவர் அத்துமீறி ஒரு வாரம் காலமாக மீன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நகராட்சி பொறியாளர் அப்பகுதியில் கொரோன தடுப்பு பணிகளை மேற்கொண்டார்.

 

அப்போது அங்கு மீன் கடை வைத்திருந்த வியாபாரி கல்விப்பிரியனிடம் கடையை வேறு இடத்தில் அமைத்துக்கொள்ள அறிவுறுத்தியதோடு, நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தைஅழைத்து மீன் வியாபாரிக்கு ரூபாய் 500ஐ அபராதம் விதிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தான் இதற்கு பின்னால் இருந்து தூண்டி விட்டதாக நினைத்துக்கொண்ட மீன் வியாபாரி கல்விப்பிரியன் கொலை திட்டத்தை தீட்டினார். இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் வெங்கடாசலம் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே வந்தபோது, மீன் வியாபாரி அரிவாளை கொண்டு வெங்கடாசலத்தின் கழுத்தில் வெட்ட முயற்சித்துள்ளார்.

இதனை முன்கூட்டியே சுதாரித்துக்கொண்ட சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், கீழே குனிந்ததால் கழுத்தில் விழ வேண்டிய கத்தி கையில் விழுந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக நகராட்சி ஆணையர் மூலமாக காவல் ஆய்வாளருக்கு புகார் அளிக்கப்பட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வெங்கடாசலம் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, மீன் வியாபாரி கல்விப்பிரியன் கைது செய்யப்பட்டார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்ட அரசு அலுவலரை மீன் வியாபாரி ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News