×

புடிங்க சார்! பிடிச்சு இந்த 4 பேரையும் 20ம் தேதி தூக்குல போடுங்க!

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனு நிலுவையில் இருந்ததால் தண்டனையை நிறைவேற்ற டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
 

இந்நிலையில் பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ந்தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட  உத்தரவிட்டுள்ளது.

மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News