×

ஊதா கலரு ரிப்பன்... உங்கள மறக்க முடியுமா..? சிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த பவர் கல்யாண்...

 

தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் தனது பிறந்தநாளை சமீபதில் கொண்டாடினார். எனவே, அவருக்கு தெலுங்கு திரையுலகம் மட்டுமில்லாமல் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயனும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி கூறியிருந்த பவர்கல்யாண் ‘உங்கள் ’ஊதா கலரு ரிப்பன்’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த பாடலை பலமுறை பார்த்தேன்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறியிருந்த சிவகார்த்திகேயன் ‘உங்கள் பதிலை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஊதா கலரு ரிப்பன் பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்தது சந்தோஷமாக இருக்கிறது. எனக்காக நேரம் ஒதுக்கி பதில் கூறியதற்கும், உங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி சார்’ என சிவா உருகியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News