தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.இப்படத்தை தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.
pushpa
இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியானது. எனவே, இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் பேன் இண்டியா ஹீரோவாக மாறியுள்ளார்.
முதல் நாளிலேயே அனைத்து மொழிகளிலும் சேர்த்து இப்படம் ரூ. 71 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலேயே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை புஷ்பா பெற்றுள்ளது.
முதல் நாள் வசூலை பொறுத்தவரை அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ 52.4 கோடி வசூல் செய்தது. அதற்கு அடுத்து அண்ணாத்த ரூ.50.85 கோடியும், மாஸ்டர் படம் ரூ. 50.02 கோடியும், பாலிவுட் படமான சூர்யவன்ஷி ரூ.39.60 கோடியும், அகண்டா ரூ.29.5 கோடியும் வசூல் செய்தது.
ஒரு படம் எவ்வளவு வசூல் என்பது எத்தனை தியேட்டர்களில் மற்றும் எத்தனை மொழிகளில் அப்படம் வெளியாகிறது என்பதை பொறுத்துள்ளது. புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பல ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதால் இந்த வசூலை பெற்றுள்ளது.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…