Connect with us

Cinema News

ஒரு படத்துக்கு இனி 70 ரூபாய் தான் டிக்கெட்டா?.. பிவிஆர் சர்ப்ரைஸ்.. எப்படி தெரியுமா?

பிவிஆர் சினிமாஸில் ஒரு படத்துக்கு 200 ரூபாய்க்கு மேல் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் பிவிஆர் தியேட்டரில் புதிய படங்களை வெறும் 70 ரூபாய்க்கு பார்க்க முடியும் என சொன்னால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பவில்லை என்றாலும் அதுதான் நெசம்.

பிவிஆர் சமீப காலமாக தியேட்டருக்கு ரசிகர்களை கொண்டு வர பல முயற்சிகளை எடுத்து வருகிறது. திங்கள் முதல் வியாழன் வரையிலான வார நாட்களில் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் ஒதுங்கவே இல்லாத நிலையில், 99 ரூபாய்க்கு கூல் டிரிங்க்ஸ், சமோசா, சாண்ட்விச் என அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது.

இதையும் படிங்க: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!. விஜயகாந்தின் உடல் அடக்கம்!. கண்ணீர் மல்க விடை கொடுத்த மக்கள்…

இந்நிலையில், அடுத்து திங்கள் முதல் வியாழன் வரை தியேட்டருக்கு வந்து புதிய படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படியொரு ஸ்பெஷலான அறிவிப்பை பிவிஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆம், தென்னிந்திய ரசிகர்களை கவரும் விதமாக பிவிஆர் விஐபி பாஸ் விரைவில் வருகிறது. ஒரு மாதத்துக்கு 699 ரூபாய் கட்டினால் போதும், மாசத்துக்கு 10 படங்களை தியேட்டரில் சென்று பார்க்கலாம். ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட 70 ரூபாய் தான் அப்படி பார்த்தால் கணக்கு வருகிறது.

இதையும் படிங்க: கடைசியாக சினிமா கேமரா முன்பு நின்ற விஜயகாந்த்!.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த ஆஃபர் இல்லை. மேலும், திங்கள் முதல் வியாழன் வரை அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வந்தால் 99 ரூபாய்க்கு உணவுப் பொருட்கள் விற்கப் படாமல் இருப்பது போலவே இந்த ஆஃபரும் இல்லாமல் போகலாம்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top