ரிலீஸுக்கு முன்னயே 3 படத்துக்கு 350 கோடி லாபம்!.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கமல்
கடந்த சில வருடங்களாகவே கமல் நடிப்பதை விட படங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்த அமரன் திரைப்படம் ரூ.300 கோடி வசூலை தாண்டியது. லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படமும் கமலுக்கு நல்ல வசூலை கொடுத்தது..
அதேநேரம் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான தக் லைப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்த படத்தை மணிரத்னத்துடன் இணைந்து கமலே தயாரித்திருந்தார். ஆனால் அந்த கடனிலிருந்து கமல் மீண்டு விட்டார். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து சேயோன், ரஜினியை வைத்து தர்மன் ஆகிய படங்களை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது..
இதுபோக வீர தீர சூரன் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதிய படத்தையும், சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு - அறிவு இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில்தான், ரிலீசுக்கு முன்பே கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி வசூலை பார்த்த செய்தியை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். ரஜினியை வைத்து கமல் தயாரித்து வரும் தர்மன் திரைப்படத்தின் அனைத்து மொழி சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ரூ.150 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள சண்டியர் திரைப்படம் ரூ.125 கோடிக்கும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தின் உரிமை ரூ.75 கோடிக்கு விற்பனையாகியாகியிருக்கிறது.
ஹாட் ஸ்டார் நிறுவனத்திடம் மூன்று படத்திற்கும் மொத்தமாக பிசினஸ் பேசி ரூ.350 கோடியை கமல் தூக்கி விட்டாராம் திரைத்துறையில் வியாபாரம் செய்வதில் கமல் கில்லாடி என திரையுலகில் பலரும் சொல்வார்கள். கமல் அதை மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிறார்.
