Categories: Cinema News latest news

கேஜிஎப்-3 படத்தில் அசத்தலான வில்லன்…அட அவரா?!…அப்ப சும்மா தெறிக்கும்!…

கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் முதல் பாகம் இந்திய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார். எனவே, கேஜிஎப் 2ம் பாகம் சமீபத்தில் வெளியானது. இப்படமும் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்று ஹிட் அடித்தது.

உலக அளவில் இப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்திலும் இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தில் சஞ்சய் சத் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது 3ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை அமைக்கும் பணியில் பிரசாந்த் சீல் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தெலுங்கு நடிகர் ரானா இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்கிற செய்தி கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா