ரஜினி - அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் 'தர்மன்'... ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை ஷேர் செய்த ராஷி கண்ணா!
Jun 30, 2026, 18:46 IST
Dharman : தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, தமிழில் 'இமைக்கா நொடிகள்' மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 'அடங்க மறு, அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களில் நடித்தார்.
இப்போது ராஷி கண்ணா 'தர்மன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் ஹீரோவாக 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கிறார்.
ரஜினி - ராஷியுடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
'உலக நாயகன்' கமல்ஹாசன் தயாரித்து வரும் இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
