
Cinema News
நாசருக்கு பதிலா நான்தான் நடிக்க வேண்டியது..! எல்லாம் வாய்க்கொழுப்பு- கமல் குறித்து பேசிய ராதாரவி…
Published on
By
சிறுவயதில் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக இன்றும் சினிமாவில் மார்க்கெட் குறையாத ஒரு பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன்.
ரஜினிக்கு முன்பே சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தவர் கமல்ஹாசன் என ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கமல்ஹாசன் குறித்து கூறியுள்ளார். அந்த அளவிற்கு எப்போதுமே பிரபலமான ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்துள்ளார்.
சிவாஜி கணேசனுக்கு பிறகு ஒரு சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் தொடர்ந்து ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களை மட்டும் நடிக்க வைத்துக் கொண்டே இருப்பார் அவர்கள் நடிப்பில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
ராதாரவியுடன் கருத்து வேறுபாடு:
உதாரணமாக நடிகர் டெல்லி கணேஷ், நாகேஷ், நாசர், சந்தான பாரதி போன்ற நடிகர்களை கமல் திரைப்படங்களில் அதிகமாக காண முடியும். அவர்களின் தனிப்பட்ட நடிப்பு தன்னுடைய திரைப்படத்திற்கு தேவையானதாக இருப்பதால் அவர் தொடர்ந்து தனது படங்களில் இவர்களை நடிக்க வைத்துக் கொண்டிருப்பார்.
மேலும் ஆரம்ப கட்டம் முதலே இவர்கள் அனைவரும் கமல்ஹாசனுடன் நண்பர்களாக இருந்தவர்கள். கிட்டத்தட்ட ராதாரவி கூட ஆரம்ப காலத்தில் இருந்து கமல்ஹாசன் நண்பராக இருந்தவர்தான் ஆனால் கமல்ஹாசனின் அதிக படங்களில் ராதாரவியை பார்க்க முடியாது.
ஒரு பேட்டியில் இது குறித்து ராதாரவி கூறும் போது கமல் திரைப்படங்களில் நாசர் அதிகம் வருவதை பலரும் பார்த்திருப்பார்கள். கிட்டத்தட்ட நாசர் வருகிற கதாபாத்திரங்கள் எல்லாம் நான்தான் நடிக்க வேண்டியது. ஆனால் இடையில் கமலுக்கும் எனக்கும் ஆன கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து விட்டோம்.
எல்லாம் நான்தான் காரணம், வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் கமலுடன் சில சண்டைகளை போட்டு விட்டேன் என அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: அந்த படத்துக்கு பிறகு தல என்ன கை விட்டுட்டார்… மனம் வருந்திய ரமேஷ் கண்ணா!…
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...