Connect with us

Cinema News

என்னை திட்டுனா என்னை வீழ்த்திட முடியுமா?.. டப்பிங் யூனியன் தேர்தலில் வெற்றி.. ராதாரவி அதிரடி வீடியோ!

சமீபத்தில் நடந்து முடிந்த டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதாரவி வெற்றிப் பெற்றுள்ளார். இந்நிலையில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இதுவரை எதிரிகளை எதிர்த்து தான் போட்டிப் போட்டு இருக்கின்றேன். ஆனால், இந்த முறை துரோகிகளை எதிர்த்து போட்டிப் போட்டு வென்று இருக்கிறேன். என்னுடன் 40 ஆண்டுகள் பணியாற்றி வந்த தம்பி எனக்கு எதிராக மாறியது எனக்கு மிகப்பெரிய வருத்தம் தான்.

இதையும் படிங்க: விஜய் புயலெல்லாம் எடுபடல!.. கட்டுக்கடங்காமல் போகும் கங்குவா டீசர்!.. இத்தனை மில்லியன் வியூஸா?..

தேர்தல் அமைதியான முறையில் அருமையாக நடைபெற்றது. கடைசி வரைக்கும் என்னை இருக்க சொல்லவில்லை. மதியமே வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டேன். என்னை கண்டபடி சிலர் திட்டினார்கள். ஆனால், என்னை திட்டினா எல்லாம் அந்த இடத்துக்கு வந்து விட முடியாது என அதிரடியாக பேசியிருக்கிறார் ராதாரவி.

இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் மொத்தம் 1021 வாக்குகள் பதிவாகின. அதில், அதிகபட்சமாக ராதாரவி 662 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக மாறியுள்ளார். ராதாரவியை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சர்குணராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதையும் படிங்க: கேரளாவிலும் கேரவன் ஏறிய விஜய்!.. திருவனந்தபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தளபதி கோஷம்!..

அவர்கள் இருவரும் பிரச்சாரத்தின் போது ராதாரவிக்கு எதிரான கருத்துக்கள், சின்மயி லியோ படத்துக்கு டப்பிங் பேசியதில் எழுந்த சர்ச்சை என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ஆனால், தென்னிந்திய நடிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தினருக்கான டப்பிங் யூனியன் தேர்தலில் அதன் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ராதாரவி தலைவராக வேண்டும் என வாக்களித்து அவரை வெற்றிப் பெறச் செய்துள்ளனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top