Categories: Cinema News latest news

உதயநிதி ஸ்டாலின் அந்த விஷயத்தில் பலே திறமைசாலி.! சர்டிபிகேட் கொடுத்த சர்ச்சை நடிகர்.!

தற்போது தமிழ் சினிமாவில் எந்த பெரிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதில் பெரும்பாலும் இடம் பெரும் நிறுவனம் என்றால் அது ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ் , உதயநிதி ஸ்டாலின் வெளியிடும்’ என்கிற வாசகம் தான். அந்தளவுக்கு பரபரப்பாக இயங்கி வருகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

இது பற்றி அண்மையில் ஒரு மேடையில் கூட உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதாவது, நாங்கள் யாரையும் மிரட்டி படங்கள் வாங்க வில்லை. அவர்கள் எங்களிடம் ரிலீஸ் செய்ய சொல்லி கேட்கிறார்கள். நாங்கள் வாங்கி வெளியிடுகிறோம் அவ்வளோ தான் கூறினார்.

இதையும் படியுங்களேன் – நயன்தாராவிடம் தொடரும் ‘அந்த’ கெட்ட பழக்கம்.! இதெல்லாம் உங்களுக்கு நல்லதில்லை மேடம்..,

இது பற்றி அண்மையில், தனது மேடை பேச்சு மூலம் அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி வரும் நடிகர் ராதாரவி கூறுகையில், ‘ உதயநிதி ஸ்டாலின் மிகவும் திறமைசாலி. மற்ற விநியோகிஸ்தர்களிடம், பணத்தை வசூல் செய்வது கடினம்.

ஆனால், உதயநிதி ஸ்டாலினிடம் பணம் எளிதாக வாங்கி விட முடியும். திறமையாக வியாபாரம் செய்கிறார். அந்த விஷயத்தில் திறமைசாலி.’என கூறியுள்ளார். அண்மையில் வெளியான, டான், காதுவாக்குல ரெண்டு காதல் என பெரும்பாலான படங்களை ரெட் ஜெயண்ட் தான் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Manikandan
Published by
Manikandan