Connect with us

Cinema News

இந்த ரகசியம் உங்க அம்மாவுக்கு கூட தெரியக்கூடாது! –  ராதாரவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயலலிதா…

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் நம்பியார் மாதிரியே பெரும் வில்லனாக நடித்து வந்தவர் ராதாரவி. கார்த்தி, ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என அப்போது பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் கூட்டணி போட்டு நடித்தவர் ராதாரவி.

எம்.ஆர். ராதாவின் மகன் என்றாலும் அவரை விட அதிகமான படங்களில் நடித்துள்ளார் ராதா ரவி. இப்போது வரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகராக ராதாரவி இருக்கிறார். இதுவரை 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் ராதாரவி.

ராதா ரவிக்கு சினிமாவிற்கு வரும் காலக்கட்டத்திற்கு முன்பே ஜெயலலிதாவுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு ராதா ரவியும் அரசியலுக்கு செல்ல ஆசைப்பட்டார். அரசியலில் ஆர்வம் காட்டினார். எனவே  அவரும் இரட்டை இலை கட்சியில் சேர்ந்திருந்தார்.

ராதாரவியை அழைத்த ஜெயலலிதா:

இந்த நிலையில் ஒரு நாள் ஜெயலலிதா ராதா ரவியை நேரில் அழைத்தார். என்னவென்று புரியாத ராதா ரவி நேரில் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார். அவரிடம் ஜெயலலிதா, உங்களை எம்.எல்.ஏ ஆக்கலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றிங்க என கேட்டுள்ளார்.

Jayalalithaa

இல்ல, எனக்கு வேண்டாம், கட்சியில் எவ்வளவோ மூத்த அரசியல்வாதிகள் இருக்காங்க. அவங்களுக்கு கொடுங்க என கூறியுள்ளார் ராதா ரவி. பரவாயில்ல நான் சொல்றேன் நீங்கதான் எம்.எல்.ஏ என கூறியுள்ளார் ஜெயலலிதா. ராதா ரவிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ராதா ரவி தனக்கு என்ன நல்லது நடந்தாலும் அதை உடனே தனது அம்மாவிடம் சொல்லிவிடுவார்.

அதை அறிந்த ஜெயலலிதா, அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை இந்த செய்தி உங்க அம்மாவுக்கு கூட தெரியக்கூடாது என கூறி அனுப்பியுள்ளார். இதை ஒரு பேட்டியில் ராதா ரவி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: டிவிட்டரை விட்டு போக ரஜினிதான் காரணமா?.. நெருக்கடியில் சிக்கிய சிவகார்த்திகேயன்!..

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top