80, 90 களில் தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டு வைத்தவர் நடிகை ராதா. பெயருக்கேற்றார் போல அழகும் வசீகரமும் வாய்க்கப் பெற்றவர். கமல், ரஜினி என இரண்டு ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்து புகழ் பெற்றார்.
அதுமட்டுமில்லாமல் சின்ன வயசுல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்த பெருமை இவரைச் சேரும். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். அந்த காலத்தில் இவரின் கால்ஷீட்டுக்கு காத்து கிடந்த தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் ஏராளம்.
இவரின் கொஞ்சும் தமிழால் சொக்கிக் கிடந்தவர்கள் சினிமா வட்டாரத்தில் பல பேர் உள்ளனர். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார்.அந்த பேட்டியில் இயக்குனர் பாரதிராஜாவை பற்றி பெருமிதத்தோடு பேசினார்.
மேலும் இப்பொழுது ஹீரோயினா நடித்தால் யார் கூட நடிப்பீங்க என தொகுப்பாளினி கேட்க நான் அஜித் கூட தான் நடிப்பேன் என்று சற்று வெட்கத்துடன் பதில் கூறினார். அவரின் பதிலை கேட்டு உடன் இருந்தவர்களும் சிரித்தனர்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…