என்னதான் சினிமாவில் ராதாரவி இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்தாலும் அச்சாணி என்பது அவரது தந்தையான நடிகர் எம்.ஆர்.ராதாவின் இரத்தத்தின் மூலமே பிறந்திருக்கும் என்று சொன்னால் அது பொய்யாகாது.
அந்த அளவுக்கு அவரது தந்தையை பார்த்து பார்த்து வளர்ந்தவர் அல்லவா ராதாரவி. ஆனால் அப்படிப்பட்ட ராதாரவிக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது யாரென்றால் கமல் என்று ஒரு பேட்டியில் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
ராதாரவி முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் மன்மதலீலை. ராதாரவியும் கமலும் ஒரே தெருவில் வசித்து சந்தித்துக் கொண்டவர்கள். அதனால் பழக்கமும் அதிகமாம். அதனால் பாலசந்திரனிடம் ராதாரவியை பற்றி கூறி வாய்ப்பு கொடுங்கள் என மன்மதலீலை படத்திற்காக வாங்கி கொடுத்தாராம்.
மேலும் நடிகர் சங்க தேர்தலிலும் ஒரு சமயம் ராதாரவிக்காக பக்க பலமாக இருந்தவரும் கமல் தான் என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார். இப்படி இருக்கும் போது அவரவர்கள் வளர்ந்து விட்ட நிலையில் ஒருவருக்கொருவர் விமர்சித்து வருவது சகஜம் தான் எனவும் சித்ரா லட்சுமணன் கூறினார்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…