Connect with us

Cinema News

என் கொள்கையைப் பின்பற்றுனா பின்னாடி வாங்க…இல்லேன்னா நாசமா போங்க…ஒரு அப்பாவா இப்படி சொல்றாரு…!!!

தமிழ்சினிமாவில் வில்லனாக வந்து தவிர்க்க முடியாத குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர். மலேசியாவில் இவருக்கு டத்தோ பட்டம் கொடுக்க டத்தோ ராதாரவி ஆனார். இவர் ராதாரவி 74ல் கன்னட படம் தான் நடித்து அறிமுகமானார்.

அப்புறம் கமல் தனது மன்மத லீலை படத்தில் நடிக்க வைத்தார். இவரது தந்தை எம்ஆர்.ராதா எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அவருடைய நினைவலைகளை ராதாரவி பகிர்கிறார்.

1964ல் புயல் வந்த போது கடல் சீற்றம் ஆக இருந்தது. அந்த நேரத்தில் எங்களை எல்லாம் காரில் அழைத்துச் சென்று கடலைக் காட்டினார். பார்த்தீயாடா கடல் எப்படி சீற்றமா இருக்குன்னு? அதே போல எல்ஐசி கட்டிடம் தீப்பிடித்து எரியும்போது நேரில் அழைத்துச் சென்று எங்களைக் காட்டினார்.

Ratharavi

எப்பவுமே வீட்ல யாரையுமே வலியுறுத்த மாட்டாரு. நான் சொல்ற கொள்கையை ஏத்துக்கிட்டா வா…இல்லேன்னா நாசமா போன்னு சொல்வாரு. நாங்க ஆனா…அவரை நாங்க சாமுண்டீஸ்வரி கோயிலுக்குக் கூட்டிட்டுப் போனோம். நீங்க வந்தா நல்லா இருக்கும்னு அப்பாவை அழைத்துச் சென்றோம். அப்படியாடா வர்றேன்னு சொன்னார். சிறைச்சாலைக்குப் போயிட்டு வந்த உடனே சமையல்காரன் ஷூட்டிங். அதனால கோயிலுக்குப் போலாம்னு முடிவு பண்ணினோம்.

சாமுண்டீஸ்வரி கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டோம். மைசூர்ல மார்கழி மாசம் நம்மூரு மாதிரி காலைல 4 மணிக்குத் திறக்க மாட்டாங்க. அங்க வழக்கம்போல எப்பவுமே காலை 6 மணிக்குத் தான் திறந்தாங்க. அவருக்கு ஆஸ்துமா இருந்ததால குளிர் தாங்காமல் உள்ளே இருந்தாரு. அப்பா வாங்கப்பா கோயில் போகலாம்னு அழைத்துச் சென்றோம்.

அங்க கோயில் பூட்டியிருந்துது. மெல்லமா தட்னோம். சார் நடிகர் எம்.ஆர். ராதா வந்துருக்காருன்னு சொன்னோம். அவரு மேலயும் கீழயும் பார்த்துட்டு என்னமோ சொன்னாரு. அப்புறம் அங்க எதிர்க்க பூசாரி வீடு இருக்குங்க. அங்க போயி கோயில் சாவி வாங்கி வந்து திறங்க. அப்போதான் சாமியப் பார்க்க முடியும்ன்னு சொன்னாரு.

M.R.Ratha

அப்போ பூசாரி வந்து கோவிலை திறந்தாரு. உள்ளே பார்த்தா ரெண்டு போலீஸ்காரர்கள். அப்போ அப்பா கேட்கிறாரு…ஏன்யா கடவுள் இருக்காருன்னு சொல்றாங்க…அப்புறம் போலீஸ் நீ ஏன்யா உள்ளே இருக்கே?ன்னு கேட்டதும்…போச்சுடா சாமி…இதுக்கு இவரு இறங்காமலே இருந்துருக்கலாம்னு நினைச்சோம்.

அப்புறம் ஆமா…உங்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டா எங்க போவீங்க? என்ன செய்வீங்கன்னு கேட்டாரு. இல்லங்க கதவ தட்டுவோம். பூசாரி வந்து கதவ திறப்பாருன்னு சொன்னாங்க. யோவ்…நான் வந்தப்பவே ஆளக் காணோம். தேடிக்கிட்டு இருந்தேன். நீங்க நினைச்சா அசுத்தம் பண்ணிக்கலாம்…ஆன்..ம்…னுட்டு மேல கோயில சுத்திப் பார்த்தாரு.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top