Categories: Cinema News latest news throwback stories

அருணாச்சலம் படத்தில் நீங்க இல்லை… வில்லன் நடிகருக்கே வில்லனாக மாறிய சூப்பர்ஸ்டார்…

ரஜினிகாந்தின் ஹிட் படங்களில் ஒன்றான அருணாச்சலம் படத்தில் நடிக்க இருந்த வில்லன் நடிகரை ரஜினி நீக்கியது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் அருணாச்சலம். கிரேஸி மோகன் எழுதிய அருணாச்சலம் படத்தை சுந்தர். சி இயக்கி இருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, ரகுவரன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார். இப்படம் 1902ம் ஆண்டு ஜார்ஜ் பார் மெக்கட்சியன் எழுதிய ப்ரூஸ்டர்ஸ் மில்லியன்ஸ் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Arunachalam

முதல் பாதியில் ஒரு குடும்பத்தில் வாழும் அருணாச்சலம். வீட்டில் நடக்கும் பிரச்னைகளால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வருபவருக்கு அவரின் உண்மை வரலாறு தெரிகிறது. அதில், 30 கோடி ரூபாயை 30 நாட்களில் செலவழித்தால் 300 கோடி ரூபாய் பரம்பரை சொத்து கிடைக்கும். ஆனால், டொனேஷன் கொடுக்க கூடாது. சொத்து வாங்கி இருக்க கூடாது. இதைப் பற்றி வேறு யாருக்கும் தெரியக்கூடாது மற்றும் அனைத்து செலவுகளுக்கும் ரசீதுகள் இருக்க வேண்டும்.

Arunachalam

இந்த கண்டிஷன்களில் எதுவும் மீறப்பட்டால் மொத்த சொத்தும் அருணாச்சலம் தந்தையின் அறக்கட்டளைக்கு சென்று விடும். அதை ரகுவரன், நிழல்கள் ரவி, கிட்டி, வி.கே. ராமசாமி ஆகியோர் நிர்வகித்து வருகிறார்கள். இவர்கள் அந்த சொத்தை அடைய அருணாச்சலத்தினை செலவழிக்கவிடாமல் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

இதையும் படிங்க: ரஜினியின் மாஸ் ஹிட் திரைப்படத்தை வாங்கி வெளியிட்ட கமல்ஹாசன் … இதெல்லாம் நம்பவே முடியலையே!!

முதலில் இப்படத்தில் வில்லனாக ராதாரவி நடிக்க இருந்தாராம். அதைப்போல படத்தினை பி.வாசு இயக்க இருந்திருக்கிறார். திடீரென ஒருநாள் ராதாரவிக்கு ரஜினிகாந்த் கால் செய்து வீட்டுக்கு அழைத்து இருக்கிறார். அங்கு சென்றவர்களிடம் குடிக்கிறீர்களா? எனக் கேட்டாராம்.

RadhaRavi-Rajini

உடனே அவரும், சரி என சொல்லி குடித்திருக்கிறார்கள். அப்போது ராதாரவியிடம் ரஜினிகாந்த் அருணாச்சலம் படத்தின் இயக்குனரை மாற்றிவிட்டேன். அதுப்போல அப்படத்திற்கு வேறு மூன்று வில்லன் நடிகரையும் தேர்வு செய்துவிட்டேன். இனி நீங்கள் அந்த படத்தில் இல்லை எனக் கூறினாராம். மனம் உடைந்த ராதாரவி அதனுடன் அவரிடம் பேசுவதே இல்லை என ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily